புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஷ்ய திரைப்படமான “ஆசிட்” திரையிடப்படுவதையொட்டி எதிர்பார்ப்புகள் மற்றும் உற்சாகம் உயர்ந்த நிலையில், உக்ரைன் போரை நினைவு கூறும்விதமாக பெண் ஒருவர் வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உக்ரைன் கொடியின் நிற உடை அணிந்து வந்த பெண்


கேன்ஸ் திரைப்பட விழா உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஒரு திரைப்பட திருவிழாவாகும். இதில் உலகெங்கிலும் இருந்து பல திரைப்பட கலைஞர்கள் கலந்து கொள்வார்கள், அங்கு பல மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டு விருதுகள் வழங்கப்படும். இந்த நிகழ்வில் ஒவ்வொரு வருடமும் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பும். அப்படி இம்முறை ஆசிட் என்ற திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பி இருந்தது. இந்த நிகழ்வு தொடங்குவதற்கு சற்று முன்பு, ஒரு பெண் உக்ரைன் கொடியின் வண்ணத்தில் உடையணிந்து, தன் மீது செயற்கையான இரத்தத்தை ஊற்றிக்கொண்டு போரின் பாதிப்புகளை பதிவு செய்ய முயற்சித்தார்.






கைது செய்யப்பட்ட பெண்


சுற்றி இருந்தவர்கள் அவரைத் தடுத்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சிவப்பு வண்ணத்தில் குளித்த அவரை சுற்றி இருந்த கேமராக்கள் படம் பிடிக்க, அந்த வீடியோக்கள் வைரல் ஆகியுள்ளது. அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினாலும், அவர் பதிவு செய்த எதிர்ப்பை புறக்கணிக்க முடியாத நிலையில் அந்த இடம் சிறிது நேரம் பரபரப்புக்கு உள்ளானது. பின்னர் அந்தப்பெண் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அந்த பெண், மஞ்சள் மற்றும் நீல நிற ஆடையுடன், நீல-ஹீல் ஷூக்களை அணிந்து, சிவப்பு நிற காப்ஸ்யூல்களை எடுத்து உடைத்து தன் மீது ஊற்றிக்கொண்டார். 


தொடர்புடைய செய்திகள்: Whatsapp Edit Message: மெசேஜ் தப்பாயிடுச்சா? அடுத்த 15 நிமிடங்களுக்குள்...புதிய அப்டேட்டை அறிவித்த மார்க் சக்கர்பெர்க்!


இயக்குநர் தீரி ஃப்ரீமேக்ஸ்


முன்னதாக, கேன்ஸ் திரைப்பட விழாவின் மதிப்பிற்குரிய இயக்குனரான தீரி ஃப்ரீமேக்ஸ், கடந்த வாரம் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பே உக்ரைனுடன் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இந்த உறுதியான நிலைப்பாடு, இந்த சவாலான காலங்களில் உக்ரைனை ஆதரிப்பதில் கான் திருவிழாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்று நெட்டிசன்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் வெளிப்படுத்தினர்.



நடிகை கேத்தரின் டெனியூவ்


கான் நிகழ்வின் தொடக்க விழாவின் போது, புகழ்பெற்ற பிரான்ஸ் நடிகை கேத்தரின் டெனியூவ் மேடையை அலங்கரித்து, போரில் உயிரிழந்தவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்தினார். அங்கு அவர், புகழ்பெற்ற உக்ரேனியக் கவிஞரான லெஸ்யா உக்ரைங்கா எழுதிய “நம்பிக்கை” என்ற கவிதையை அவர் கருணையுடனும், மரியாதையுடனும் வாசித்தார். அவரது அழுத்தமான உரையின் மூலம், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது மட்டுமல்லாமல், அவர்களின் உணர்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.