Jeff Bezos Engaged: 59 வயதில் காதலியை கரம்பிடிக்கிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.. யார் அந்த தொழிலதிபர்..

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நீண்ட நாள் காதலியான, லாரன் சான்செஸை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நீண்ட நாள் காதலியான, லாரன் சான்செஸை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

பெசோஸ் - லாரன் நிச்சயதார்த்தம்:

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் கடந்த 2018ம் ஆண்டு முதல், லாரன் சான்செஸ் என்பவரை காதலித்து வருகிறார். இவருக்கு பாட்காஸ்ட் ஊடகவியலாளர், ஹெலிகாப்டர் பைலட்  மற்றும் பிளாக் ஆப்ஸ் ஏவியேஷன் நிறுவனர் என பன்முகம் கொண்டவர். தற்போது இந்த ஜோடி பிரான்ஸில் நடைபெற்று வரும், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளனர். இதற்கு தனது 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொகுசு படகில், லாரன்ஸை பெசோஸ் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், லாரன்ஸ் தனது கையில் வைர மோதிரம் அணிந்து இருப்பதாகவும், இதன் மூலம் பெசோஸ் உடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருப்பது உறுதியாகியுள்ளதாகவும், அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

வெளிவந்த காதல்:

கடந்த 2018ம் ஆண்டு முதலே லாரன்ஸ் உடன் பெசோஸ் பழகிவந்தாலும், 2019ம் ஆண்டு தனது முதல் மனைவி மெக்கன்ஸி ஸ்காட்டை விவாகரத்து செய்த பிறகு தான் இந்த ஜோடி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதன்பிறகு சினிமா விழாக்கள், பார்ட்டி, அறக்கட்டளை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஜோடியாக தோன்றினர். கடந்த 2020ம் ஆண்டு பெசோஸ் இந்தியா வந்தபோதும், லாரன்ஸ் உடன் வந்திருந்தார்.

யார் இந்த லாரன்:

53 வயதான லாரன் ஏற்கனவே ஹாலிவுட் திரையுலகை சேர்ந்த பாட்ரிக் வைட் ஷெல் எனும் ஏஜெண்டை திருமணம் செய்து இருந்தார். அவருடன் சேர்ந்து ஒரு மகன் மற்றும் மகளை பெற்றெடுத்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்றனர். லாரன் தொடர்பாக தனியார் நிகழ்ச்சியில் பேசியிருந்த பெசோஸ் “லாரன் மிகவும் தாராளமான மற்றும் மிகப்பெரிய மனம் கொண்ட நபர்” என பாராட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக “பெசோஸ் மிகவும் அன்பான மற்றும் ஆதரவு அளிக்கக் கூடிய பார்ட்னர்” என லாரன் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

முதல் திருமணம்:

59 வயதான பெசோஸ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், அவருக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். தனது முதல் மனைவி மெக்கன்ஸி ஸ்காட் உடன் 25 ஆண்டுகள் அவர் ஒன்றாக வாழ்த்து வந்தார். விவாகரத்தை தொடர்ந்து அவருக்கு, 38.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அமேசான் நிறுவனத்தின் 4% பங்குகளை பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கினார். ஜீவனாம்ச வரலாற்றிலேயே வழங்கப்பட்ட அதிகபட்ச தொகையாக இது கருதப்படுகிறது. இதன் மூலம், மெக்கன்ஸி ஸ்காட் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola