Whatsapp Update : வாட்ஸ்-அப் செயலியில் அனுப்பிய மெசேஜை 15 நிமிடங்களுக்குள் திருத்தி அனுப்பும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ் தவறாகிவிட்டதே என இனி கவலை வேண்டாம். புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் பதிவில், பயனர்கள் இனி வாட்ஸ் அப்பில் அனுப்பும் மெசேஜ்களை எடிட் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவும் வாட்ஸப் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் அவர்கள் யூசர் அனுபவத்தினை மேம்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கம் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
சமீபத்தில், வாட்சப் ஸ்டேட்டஸில் நமக்கு தெரியாமல் பகிரப்படும் நம்முடைய தகவல்களுக்கு ரிப்போர்ட் செய்தல், ஸ்பேம் அழைப்புகளை தவிக்கவும், வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸில் வைப்பது உள்ளிட்ட பல புதிய அம்சங்களை வாட்சப் வெளியிட்டிருந்தது. அதோடு, நான்கு ஸ்மாட்ஃபோன்கள் வரை வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என்றும் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை அறிமுகம் செய்தது மெட்டா நிறுவனம்.
புதிய அப்டேட்
அந்த வகையில் பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லாக் சாட் (lock chat) என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் ஒருவருடனான சாட்-டை (chat) பிரத்யேகமாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும்.
முன்னதாக, பயனர்கள் தனிப்பட்ட சாட்களையே, தொழில் ரீதியான உரையாடல்களையே மற்றவர்கள் பார்க்காமல் இருக்க வாட்ஸ் அப் மொத்தத்தையும் லாக் (whatsapp lock) செய்து வைப்போம். ஆனால் அதனை எளிமையாக்கும் வகையில் chat lock என்ற ஆப்ஷனை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரல் ரேகை (finger print) அல்லது பாஸ்கோர்டு (password) மூலமாக இதனை லாக் செய்து கொள்ளலாம். பயனர்களின் அனுமதி இல்லாமல் வெளி நபர்கள் யாரேனும் வாட்ஸ் அப்பை திறந்து பார்த்தாலும் குறிப்பிட்ட லாக் செய்து வைக்கப்பட்டுள்ள சாட்டை அவர்களால் காண முடியாது. மேலும், லாக் செய்யப்பட்ட சாட்டின் மூலமாக பகிரிந்து கொள்ளப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் செல்போனில் உள்ள கேலரியில் தானாகவே சேவ் (SAVE) ஆகாது எனவும் தெரிகிறது.
இந்த புதிய வசதியை தற்போதைய சூழலில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அண்மையில் வந்த அப்டேட்
ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றொரு நபருக்கு அனுப்பும்போது, அதில் கேப்ஷன் சேர்க்கும் வசதி பயன்பாட்டில் உள்ளது. அந்த கேப்ஷனை திருத்தி எழுதவும், டெலிட் செய்யவும் புதிய அப்டேட்டில் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதோடு சிறப்பம்சமாக டாகுமெண்ட்களை பகிரும்போது இனி கேப்ஷனை சேர்க்க முடியும். இதன்படி, செய்திதாள்கள், வர்க் டாகுமெண்ட்ஸ் ஆகியவற்ரை பகிரும்போதும் இனி கேப்ஷனை சேர்க்கலாம். இந்த புதிய அப்டேட்கள் படிப்படியாக பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.