இலங்கையில் ஜனநாயகம் தொடர வேண்டும்- இந்தியா
இலங்கையில் ஜனநாயகம், உறுதித்தன்மை, பொருளாதார மீட்சி ஏற்படுவதை முழுமையாக ஆதரிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார சிக்கல்:
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதார நிலை மிக மோசமான நிலைக்கு சென்றது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் சாமானிய மக்கள் உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கே மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
பதவி விலகல்:
இலங்கையில் ஏற்பட்ட பணவீக்கத்தால் , அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி நேற்று பதவி விலகினார்.பதவி விலகலை தொடர்ந்து ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் சிக்கி இலங்கை எம்.பி. ஒருவரும் இருந்ததாக கூறப்பட்டது.
Also Read:Sri Lanka : மஹிந்த ராஜபக்சவின் வீட்டை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! இலங்கையில் தொடரும் பதற்றம்...!
இந்தியா கருத்து:
இந்நிலையில், இலங்கையின் நிலை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. மிக அண்டை நாடான இலங்கையுடன், இந்தியா வரலாற்று ரீதியான தொடர்பை கொண்டுள்ளது என்றும், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கை மக்களுக்கு ரூ. 27,000 கோடி மதிப்பிலான உதவியை இந்த ஆண்டு இந்தியா வழங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பொருளாதார சிக்கலில் இருந்தும், கொரோனா தொற்றிலிருந்தும் இலங்கை மீண்டு வர பல்வேறு உதவிகளை இந்தியா செய்தது எனவும் தெரிவித்துள்ளது. ஜனநாயக வழியில் இலங்கை மக்கள் எடுக்கும் முடிவுகளுக்கு இந்தியா ஆதரித்து வந்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் ஜனநாயகம், உறுதித்தன்மை, பொருளாதார மீட்சி ஏற்படுவதை முழுமையாக ஆதரிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
Also Read:'பற்றி எரியும் இலங்கை' பரவும் வன்முறை...! பதவி விலகுவாரா கோத்தபய ராஜபக்ச?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்