பாகிஸ்தான் நாட்டின் எம்.பி.யாக பொறுப்பு வகிப்பவர் ஆமீர் லியாகத் ஹூசைன். இவருக்கு 49 வயதாகிறது. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 18 வயதான இளம்பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு அந்த நாட்டில் உள்ள பலரும் எதிர்ப்பும், கண்டனங்களும் தெரிவித்த நிலையில் மணமகள் சயீதா தானியா ஷா இந்த திருமணத்திற்கு முழு சம்மதம் என்று தெரிவித்தார்.




இந்த நிலையில், திருமணமாகிய 4 மாதத்தில் தனது கணவரை விவாகரத்து செய்ய சயீதா தனியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக எம்.பி. லியாகத்திற்கு நீதிமன்றம் 7ந் தேதி ஆஜராக கோரி சம்மன் அனுப்பியுள்ளது. சயீதா தானியாஷா தனது கணவர் ஆமீர் லியாகத் பேயை விட மோசமானவர் என்று வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், லியாகத் போதையில் தன்னை மிகவும் கொடூரமாக தாக்குவதாகவும் சயீதா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தன்னுடைய நான்கு மாத திருமண வாழ்க்கை மிகவும் கொடுமையாக அமைந்தது என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆனால், சயீதாவின் குற்றச்சாட்டிற்கு எம்.பி. லியாகத் மறுப்பு தெரிவித்துள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.பி.யின் இரண்டாவது மனைவி சையதா துபா ஆமீர் லியாகத்தை திருமணம் செய்வதை உறுதி செய்திருந்தார். இதன் பின்னரே, எம்.பி. ஆமீர் லியாகத் மூன்றாவது திருமணம் செய்தார். சிறுவயதில் இருந்தே எனது கணவர் எனக்கு ஒரு முன்னுதாரணம் போல திகழ்ந்தவர் என்று சயீதா தானியா திருமணத்தின்போது கருத்து தெரிவித்திருந்தார். சயீதா தானியா எம்.பி. ஆமீர் லியாகத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.




அப்போது, அவர்களது திருமணம் குறித்து பாகிஸ்தானில் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அப்போது, எம்.பி.யின் மகள் தனது குடும்பத்தை பற்றியும், தனது தந்தையின் திருமணம் பற்றியும் கருத்து தெரிவிப்பது குறித்து நிறுத்திக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த சூழலில், திருமணத்தின்போது முன்னுதாரணம் என்ற கணவரை தற்போது பேயை விட மோசமானவர் என்று அவரது மூன்றாவது மனைவி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க : Rajapaksa Escape : நைஜீரியாவில் இருந்து இலங்கைக்கு வந்த விமானம்! உயிருக்கு பயந்து வெளிநாடு தப்பிச்செல்ல ராஜபக்சே திட்டம்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண