கடைக்கு செல்லும் போது நாம் ஒரு சில சமயங்களில் கடையில் வேலை பார்ப்பவர்கள் மீது கோபப்படும் சூழல் உருவாகும். அந்த சமயத்தில் நாம் கடையில் அவர்கள் செய்த வேலை தொடர்பாக மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். ஒருவேளை தனி நபர் தொடர்பான விமர்சனத்தை செய்ய முயன்றால் அது பெரும் சிக்கலில் முடிந்துவிடும். முக்கியமான பாலியல் ரீதியாக யாரையாவது சீண்டினால் சட்டம் தன் கடமையை செய்யும். செய்துவிட்டது. அப்படி ஒரு நபர் செய்த காரியம் அவருக்கு பெரியளவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?


லண்டனின் பிரபல சந்தை பகுதியில் கிரேக்ஸ் என்ற கடை ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கடைக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி ஜோனத்தன் போல்டன் என்ற 36 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இவர் அக்கடையில் பொருட்களை வாங்கியுள்ளார். அதன்பின்னர் அங்கு பணம் செலுத்துமிடத்தில் வந்து வரிசையில் நின்றுள்ளார். அப்போது அவர் அங்கு இருந்த பெண் ஊழியரை, அவரின் மார்பகங்களை விமர்சித்து மோசமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. 


அதாவது அவர் அந்தப் பெண்ணின் மார்பகங்கள் தொடர்பாக ஒரு கமெண்ட் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அப்போது காவல்துறையினர் அந்த நபரை எச்சரித்து விடுத்துள்ளனர். ஆனால் அதில் திருப்தி அடையாத அப்பெண் ஊழியர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது போல்டன் ஆஜாராகியுள்ளார். 




அப்போது அவர், “அந்தக் கடையில் நான் அன்று வரிசையில் நின்று கொண்டிருந்த போது ப்ளூடூத் ஹெட்செட் மூலம் என்னுடைய காதலியிடம் பேசி கொண்டிருந்தேன். அவருடன் எனக்கு சண்டை ஏற்பட்டது. அவரை தான் நான் திட்டினேன். இந்த கடை ஊழியரை அல்ல” எனக் கூறியுள்ளார். எனினும் அவர் கூறியதற்கு உரிய ஆதாரம் எதுவும் கொடுக்கவில்லை.மேலும் இவ்வழக்கின் விசாரணையின் போது போல்டன் அந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் மது அருந்திவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டு அபராதம் பெற்றதும் தெரியவந்துள்ளது. 


இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி சமூக பொறுப்புடன் போல்டன் எப்போதும் நடப்பவராக தெரியவில்லை. ஆகவே அவர் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளவும், அந்தப் பெண்ணை தவறாக விமர்சனம் செய்ததற்கும் சேர்த்து மொத்தமாக 233 பவுண்டு அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 50 பவுண்ட் அப்பெண்ணிற்கு நஷ்ட ஈடாகவும், மீதமுள்ள பணம் நீதிமன்றத்திலும் அவர் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 23 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். இப்படி ஒரு பெண்ணின் மார்பகம் தொடர்பாக விமர்சித்த நபருக்கு நீதிமன்றம் தகுந்த அபராதம் அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


மேலும் படிக்க: இசைக்கு மொழியே இல்லை.. அர்ஜுன் ரெட்டி கியாராவின் பாடலை ரீல்ஸ் செய்யும் தான்சானிய நாட்டு பழங்குடிகள்..