சமூக வலைதளங்களில் எப்போதும் பாடல்கள் தொடர்பான ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஒரு சில ஹிந்தி பாடல்களின் ரீல்ஸ் வீடியோ அனைத்து பகுதி மக்களையும் கவரும் வண்ணம் அமைந்திருக்கும். அப்படி ஒரு பாடலின் ரீல்ஸ் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. ஆனால் அதில் ஒரு சிறப்பு அம்சமும் உள்ளது. அது என்ன?
தற்போது வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோவில் இருப்பவர்கள் தான் முக்கியமான சிறப்பு அம்சம். ஏனென்றால் இந்த வீடியோவில் இருப்பவர்கள் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒரு பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களுடைய பகுதியில் இருந்து கொண்டு இந்தப் பாடலுக்கு ஏற்ப அழகாக வாய் அசைத்து சிறப்பாக சைகை வேற காட்டுகின்றனர்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வரும் பாடல் ஷெர்ஷா திரைப்படத்தில் வரும் ராட்டன் லம்பியான் பாடல். இந்தப் பாடலுக்கு அவர்கள் தங்களுடைய பாரம்பரிய உடையை அணிந்து ரீல்ஸ் செய்யும் வீடியோ தான் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ அந்த பாலிவுட் படக்குழு வரை சென்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைப் பாடிய ஜூபின் அதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் ட்விடட்டர் தளத்தில் பலரும் இந்த வீடியோவை பார்த்து, “இசைக்கு மொழி நாடு ஆகிய எந்தவித பேதமுமில்லை” என்ற கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ஓமைக்ரான் அச்சுறுத்தல் : புதிய வகை கொரோனா அறிகுறிகள் என்ன? மருத்துவர் தரும் க்ளியரான விளக்கம் இதோ