ஆன்மீகம், மடம், பெண்கள், வீடியோ இந்த வார்த்தைகளை எல்லாம் கோர்த்துப் பார்த்தால் முதலில் நினைவுக்கு வருபவர் சாமியார் நித்யானந்தா.ஒரு காலத்தில் தனது லீலைகளால் பிரபலமான நித்யானந்தா போலீஸ் தன்னை நெருங்குவதை உணர்ந்து தப்பியோடிய முதல் இடம் நேபாளம் தான். 10, 15 ஆண்டுகள் கழித்து இன்று சாமியார் சிவசங்கர் பாபா தேர்ந்தெடுத்த பதுங்கிடமும் நேபாளம் தான். அதென்ன தேடப்படும் குற்றவாளிகள் எல்லோருமே நேபாளத்துக்கு போறாங்க? அப்படீன்னு கேட்கிறீங்களா? காரணாம் இருக்கு.
இமயமலையை அரணாகக் கொண்ட எழில் கொஞ்சும் நேபாளம் ஆன்மீகத் தலமாகவும் இருக்கிறது. நேபாள பொருளாதாரத்துக்கு சுற்றுலா துறை தான் பெரும் பங்களிப்பைச் செய்கிறது.இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற சிறிய நாடுகளில் குற்றவாளிகளின் முதல் தேர்வாக நேபாளம் இருக்கிறது. காரணம், இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளைவிட நேபாளத்திற்கு செல்வதென்பது மிகவும் சுலபமான விஷயம். தீவிரவாதம் மலிந்த நாடுதானே அங்கு யார் வேண்டுமானால் போகலாம் வரலாம் என்று நினைத்தெல்லாம் பாகிஸ்தானில் நுழைந்துவிட முடியாது. முறையான ஆவணங்கள் இருந்தாலும்கூட பாகிஸ்தான் செல்வது என்பது அசாத்தியமானது. அதேபோல், இலங்கைக்கு தப்பலாம் என்றால் கடல் வழியில் செல்வதில் மிகப்பெரிய ரிஸ்க் இருக்கிறது. ஒருவேளை கடலோர காவற்படை கண்காணிப்பில் சிக்காமல் சென்றுவிட்டாலும் கூட இலங்கையிலிருந்து வேறு நாட்டிற்கு செல்வது மிகமிகக் கடினம்.மற்றொரு குட்டி நாடான திபத்திற்கு செல்ல வேண்டுமென்றால் சாலை வழியிலேயே பயணம் செய்யவேண்டும். அந்தப் பயணம் தப்பியோடுபவர்களுக்கு மிகவும் அசவுகரியமானது. சிரமமானது. மீதம் இருக்கக்கூடியது நேபாளம்தான். நேபாளத்திற்கு சாலை வழியாக மிகச் சுலபமாக சென்றுவிட முடியும் என்கின்றனர்.
PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!
நேபாளத்திலிருந்து பிறநாடுகள் செல்வதும் எளிதாக இருக்கிறது. நேபாளத்திலிருந்து 'அரைவ் ஆன் விசா' மூலம் செல்லக்கூடிய நாடுகளுக்கு சுலபமாக தப்பித்துவிட முடியும். இப்படித்தான் சிவசங்கர் பாபாவும் திட்டமிட்டு நேபாளம் சென்றார் ஆனால் ஏதோ காரணத்துக்காக காசியாபாத் வந்த அவரை போலீஸார் பொறிவைத்துப் பிடித்துவிட்டனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா நேபாளம் இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டது. அப்போது அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களால், இந்தியர் ஒருவர் சுடப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு இருநாடுகளும் எல்லைகளைப் பலப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இருந்தாலும், குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பிக்க சுலபமாக கருதும் நாடாகத்தான் தொடர்ந்து நேபாளம் இருந்து வருகிறது.
‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!