கொலம்பியா நாட்டில் பெண் ஒருவரை லிப்டில் நாய் கொடூரமாக தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றன. பார்ப்பவர்களுக்கு இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


25 வயதுடைய அந்தப் பெண் தனது சொந்த செல்லப்பிராணியின் கொடூரமான தாக்குதலிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சி லிப்டில் இருக்கும் கேமராவில் பதிவுகள் கைப்பற்றியுள்ளன.


கொலம்பியாவின் குகுடாவின் பிராடோஸ் மாவட்டத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் அப்பெண் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது ஷூலேஸைக் கட்டிக் கொண்டிருந்தபோது, ​​அவரது பிட் புல் என்ற நாய் அவரை தாக்கியதாக தெரிகிறது. வீடியோவில், நாய் தன்னைத் தாக்கும் போது அந்தப் பெண் லிப்டை நோக்கி சென்றார். ஆனால் அவரை விடாமல் நாய் கடித்து கொண்டிருந்தது. நாயின் பலமான பிடியில் இருந்து விடுபட முயற்சித்த பெண், இறுதியில் எழுந்து உட்கார்ந்து, ரத்தத்தில் நனைந்த கையால் லிப்டை திறந்து தப்பிக்கிறார். 


மேலும் படிக்க: London: வீடு இருக்கு.. ஆனா இல்லை..! எல்லாமே கண்ணாடியின் மாயம்! வைரலாகும் கண்ணுக்குத் தெரியாத வீடு!


பெண்ணின் உடலின் பல்வேறு பாகங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விரல்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உறவினர் ஒருவரால் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


 






"பெண்ணின் வலது கையின் இரண்டு விரல்களில் எலும்பு முறிவு உள்ளது. அவர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.


இந்த சம்பவம் குறித்து குடியிருப்பில் வசிக்கும் மற்ற குடியிருப்பாளர்கள் கூறுகையில், 
நாய் அங்கு வாழ்ந்த நான்கு மாதங்களில் ஒருபோதும் இதுபோல செய்யும் என்பதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்றும், உரிமையாளர் எப்போதும் முகவாய் அணிந்து அவரை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வார் எனவும் கூறினார்.


அதிகாரிகள் நாயின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய்ந்து, நடத்தை பகுப்பாய்விற்காக குகுடாவின் சுகாதார செயலகத்தின் ஜூனோசிஸ் மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.


மேலும் படிக்க: Ukraine-Russia: உக்ரைனில் சிக்கும் ரஷ்ய வீரர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு.. வழக்கறிஞரின் உத்தரவால் சர்ச்சை


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண