அரசு முறை பயணமாக துபாய் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வழக்கமான உடையில் இல்லாமல் மாடர்ன் உடையில் சென்றார்.  இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வந்தது. 



இதையடுத்து, சென்னையில் இருந்து துபாய் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு துபாய் அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ காரில் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார். தற்போது, அந்த புகைப்படம் மற்றும் வீடியோவும் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 






தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியாக மாலை 5 மணியளவில் துபாய்க்கு பயணம் மேற்கொண்டார். நான்கு நாள் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்ற அவர், முன்னதாக அவர் தனது வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது, முதலமைச்சரை பார்த்த திமுகவினர் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். முதலமைச்சரை வேஷ்டி, சட்டையில் பார்த்த அவர்களுக்கு, மாடர்ன் உடையில் வந்து ஆச்சர்யம் கொடுத்தார். பேண்ட், சட்டையின் ஜர்கின் போட்டுக்கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.



மாடர்ன் உடையில் வந்திருந்த முதலமைச்சரை  திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவருக்கு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். திமுக நிர்வாகிகள், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.