உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்நாட்டின் வளர்ச்சிக்கும், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற, சீனாவின் எண்ணத்திற்கும் முக்கிய ஆதாரமாக இருப்பதும் இந்த மக்கள் தொகை தான்.


இரண்டாவது ஆண்டாக குறைந்த சீன மக்கள் தொகை:


ஆனால், குழந்தையை பெற்றுக் கொள்வதில் தற்போது பொதுமக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, சீனாவில் குழந்தை பிறக்கும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. அதேசமயம் இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது. 


இந்த நிலையில், சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறைந்துள்ளது. சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்கள் தொகை உள்ளதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டை காட்டிலும் 2 மில்லியன் அளவுக்கு மக்கள் தொகை குறைந்துள்ளதாக தெரிகிறது. 


 2022 ஆம் ஆண்டின் முடிவில் சீனாவின் மக்கள் தொகை 1.41178 பில்லியன் ஆக இருந்த நிலையில்,  1.40967 பில்லியன் ஆக குறைந்துள்ளது.  2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023ல் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து 6,90,000 ஆக அதிகரித்துள்ளது.  


காரணம் என்ன?


இதன் மூலம் சீனாவில் மொத்த மக்கள் தொகை 1.4 பில்லியன் உள்ளது என்று தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.  அதேபோல, கடந்த 2022ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் 9.56 மில்லியனாக இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் 9.02 மில்லியனாக குறைந்துள்ளது. 


சீனாவில்  16 முதல் 59 வயதிற்குட்பட்டவர்கள் 2022ஆம் ஆண்டில் இருந்து 10.75 மில்லியன் குறைந்துள்ளது. அதே நேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் இருந்து 16.93 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலக மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்த வந்த சீனா, 2022ஆம் ஆண்டுக்கு கொரோனாவுக்கு பிறகு 8,50,000 மக்களை இழந்தது.


 1960ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக சீன மக்கள் தொகை கணிசமான அளவில் குறைந்தது. 2016 -ம் ஆண்டிலேயே "ஒரு குழந்தை கொள்கையை" சீன அரசு தளர்த்திக் கொண்டதோடு,  கடந்த ஆண்டு முதல் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெறவும் அனுமதி வழங்கப்பட்டது.


ஆனாலும்,  கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்து வருகிறது. இதனால் சீனாவின் மாநில அரசுகள் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு பரவும் போர்.. பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்த காரணம் என்ன?


Crime: குழந்தையை கொன்ற பிறகு உடலுடன் 19 மணி நேரம் காத்திருந்த பெங்களூரு சிஇஓ! கோவா கொலையில் பகீர்!