Employee Attacks Manager: அமெரிக்காவில் வேலையை விட்டு நீக்கிய மேனேஜர்களை வாடிக்கையாளர்கள் முன்பே, பெண் ஊழியர் அடித்து உதைத்துள்ளார்.


மேனேஜர்களை தாக்கிய பெண் ஊழியர்:


அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில், தன்னை பணிநீக்கம் செய்த மேலாளர்களுடன் ஒரு பெண் ஊழியர் சண்டையிட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் கான்கோர்ஸ் டி பகுதியில் உள்ள ஹார்வெஸ்ட் & கிரவுண்ட்ஸ் தேநீர் கடையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


பிரச்னை என்ன?


பணி தொடர்பாக சக ஊழியருடன் சண்டையிட்ட காரணத்தால், ஷகோரியா எல்லி என்ற அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் தான், தன்னை கடைக்குள் அனுமதிக்காத மேலாளர்ளை அந்த பெண் தாக்கியுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், இருதரப்புக்கும் புகார் எண் வழங்கப்பட்டு உள்ளதாகவும், முறைப்படி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.






நடந்தது என்ன?


இதுதொடர்பான வீடியோவில், “எனது பொருட்களை என்னிடம் கொடுங்கள்" என்று கூறிக்கொண்டே இரண்டு மேலாளர்கள் உடன், அந்த பெண் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால்,  கடையின் பின்புறம் செல்ல விடாமல் அவரை மேனேஜர்கள் தொடர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் கடையை விட்டு வெளியேறும்படியும் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் அங்கிருந்த நாற்காலியை எடுத்து மேனேஜர்களில் ஒருவரை தாக்க முயன்றார். அதற்குள் அந்த மேலாளர் நாற்காலியை அந்த பெண்ணின் கைகளில் இருந்து இழுத்து எறிந்தார். அதற்குள் மீண்டும் கடைக்குள் செல்ல முயன்ற அந்த பெண்ணை, சிவப்பு டி-ஷர்ட் அணிருந்து இருந்த மற்றொரு மேனேஜர் தடுத்து நிறுத்தி கீழே தள்ளினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தன்னை கீழே தள்ளிய நபரை சரமாரியாக தாக்கியுள்ளார். தன்னை தடுக்க முயன்ற மற்றொரு மேனேஜரையும் அடித்துவிட்டு அங்கிருந்து வெளியேற தொடங்கினார். ஆனால், திடீரென மீண்டும் ஓடிவந்து கடைக்குள் எகிறி குதித்தார். தடுக்க முயன்ற இரண்டு மேனேஜர்களையும் தாக்கி விட்டு, தனது கோட் மற்றும் பேக்குடன் அந்த பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.


பின்னர் அவள் மேலாளரிடம் குற்றம் சாட்டி அவனை அடித்தாள், அவன் அவளை தரையில் வீசினாள். வீடியோவில் அவள் திடீரென்று போக்கை மாற்றுவதற்கு முன்பு நடந்து சென்று கவுண்டருக்கு மேல் குதிப்பதைக் காட்டியது. அவள் பை மற்றும் கோட்டுடன் கடையில் இருந்து ஓட முற்பட்டபோது, ​​அவள் கால் இடறி கீழே விழுந்தாள். அவள் கடையை விட்டு வெளியேறுவதுடன் வீடியோ முடிந்தது.