AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...

சீனாவில், இளைஞர் ஒருவர், ஏஐ காதலியிடம் ஏமார்ந்து, லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சீன இளைஞர் ஒருவரை, ஏஐ காதலியை வைத்து ஏமாற்றிய சிலர், லட்சக்கணக்கில் பணத்தை பறித்து ஏமாற்றிய சம்பவம், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில், இத்தகைய ஆபத்துகளும் இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

Continues below advertisement

உலகெங்கும் வேகமாக வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம்

கணினியில் லேட்டஸ்ட் தொழில்நுட்பமான ஏஐ என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்தான் தற்போது உலகெங்கும் பேச்சாக மாறியுள்ளது. கணினியில் பலர் செய்யும் பல வேலைகளை, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுததி எளிதாகவும், மிக மிக விரைவாகவும் செய்து முடிக்கலாம் என்பதால், உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான நிறுவனங்கள், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. இதனால், ஏஐ தொழில்நுட்பம் உலகெங்கும் வேகமாக வளர்ந்துவருகிறது.

மறுபுறம், ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. ஆனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள், அப்படியெல்லாம் ஏதும் இல்லை என மறுத்து வருகிறார்கள். ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டுவருவதால், அதன் மூலமே ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என அவர்கள் கூறி வருகின்றனர்.

ஏஐ காதலியிடம் லட்சங்களை இழந்த சீன இளைஞர்

இந்த செய்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஆக்கப்பூர்வமான பல வேலைகளுக்கு உதவினாலும், அதனால் உபத்திரவமும் உண்டு என்பதற்கு, சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாகியுள்ளது. ஆம், சீன இளைஞர் ஒருவர், ஏஐ காதலியிடம் லட்சங்களை இழந்துள்ளார்.

ஆம், ஷாங்காயை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஜியாஓ என்ற பெண்ணிடம் சமூக வலைதளம் மூலமாக பழகி, அவளிடம் மனதை பறிகொடுத்துள்ளார். ஆனால், அது ஒரு மோசடி கும்பலால் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பெண் என்பது அவருக்கு தெரியாது.

வச்ச குறி தப்பாது என்பதுபோல், தாங்கள் விரித்த வலையில் அந்த இளைஞர் சிக்கியதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டது அந்த மோசடி கும்பல். ஏஐ மூலமாகவே அந்த பெண் தொடர்பான அடையாள ஆவணங்களை உருவாக்கிய அந்த கும்பல், இளைஞரிடம் பிசினஸ் செய்யலாம் எனக் கூறியும், குடும்ப உறுப்பினருக்கு உடம்பு சரியில்லை, மருத்துவ செலவிற்கு பணம் வேண்டும் எனக் கூறியும், பணத்தை கரந்துள்ளனர்.

இதற்கான ஆவணங்களையும் ஏஐ மூலமாகவே அவர்கள் உருவாக்கியுள்ளனர். இப்படியாக, சுமார் 24 லட்சம் ரூபாயை அந்த இளைஞரிடம் இருந்து சுருட்டியுள்ளது அந்த மோசடி கும்பல். இது குறித்து விசாரித்த காவல்துறையினர், இளைஞருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள், வீடியோக்கள் எல்லாம், பல படங்களை இணைத்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக ஒரு குழுவே செயல்பட்டுள்ளதும் அவர்களது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால், பல சாதகமான விஷயங்கள் இருந்தாலும், இதுபோன்ற ஏமாற்று வேலைகளும் அதிகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதிலும், ஏஐ மூலம், உயிர்புடன் இருப்பதுபோன்ற படங்களையும், வீடியோக்களையும் உருவாக்க முடியும் என்பதால், அதை வைத்து ஏமாற்றவும் ஒரு கும்பல் கிளம்பிவிடும். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். அதையேதான், சமீபத்தில் மெட்டா நிறுவனமும் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola