China Covid Variant : XXB என்ற புதிய கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. இந்த புதிய கொரோனா தொற்று ஜூன் மாதத்தல் உச்சம் அடையும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


கொரோனா தொற்று


கொரோனா பெருந்தொற்று சீனாவின்  ஊஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது. இந்த கொடிய நோய் உலகம் முழுவதும் பரவி இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கின.  லட்சக்கணக்கான மக்களை இந்த கொரோனா நோய் தொற்று பலி வாங்கியது. இந்தியாவில் 3 அலைகளாக மிரட்டிய கொரோனா தொற்றால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.


முதல்  அலை, 2-வது அலை, 3-வது அலை என பரவிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும், அவ்வப்போது குரங்கு அம்மை, ஒமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வகைகளும் அச்சுறுத்தி வந்தன.


அதன்பிறகு தடுப்பூசிகள் வந்த பிறகே தொற்று பரவலின் தீவிரம் குறைந்தது. தற்போது வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் பெரும்பாலும் கட்டுக்குள் வந்ததோடு, உலக சுகாதார அமைப்பும் கொரோனா அவசர நிலை  அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்டது. எனினும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.


புதிய வைரஸ்


இந்நிலையில், சீனாவில் மீண்டும் ரைவஸ் பரவல் மெல்ல தலை தூக்க தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஒமிக்ரான் வகை  கொரோனாவின் திரிபான XXB என்ற வைரஸ் சீனாவில் ஏப்ரல் மாத்தில் இருந்தே தொற்று பாதிப்பு உயரத் தொடங்கிள்ளது. இதுவரை 4 கோடி பேர் இந்த புதிய  வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


இந்த புதிய வைரஸ் மே மாத இறுத்திக்குள் 40 மில்லியன் பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதேபோல் ஜூன் மாத  இறுதியில் இந்த கொரோனா அலை உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 65 மில்லியனாக பாதிப்பு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய வைரஸ் சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 


XXB என்பது ஒமிக்ரானின் BA.2.75 மற்றும் BJ.1 துணை வகைகளின் கலப்பினமாகும். XBB மாறுபாடு BA.2.75-ஐ விட வளர்ச்சி மற்றும் நோயெதிர்ப்புத் தவிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த புதிய வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உடல் செல்களுக்குள் நுழைந்து தொற்று நோயை உண்டாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.




மேலும் படிக்க


School Reopening: 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு