சீனா ஜியாங்ஸி மாகாணம் நான்சாங் கவுண்ட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சாலை விபத்தானது நன்சாங் கவுண்டியில் அதிகாலை 1 மணிக்கு நடந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக நஞ்சாங் மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர் கூறுகையில், " மூடுபனி வானிரை காரணமாக இந்த விபத்து நடத்திருப்பதாக" தெரிவித்தனர். மூடுபனி அதிக அளவில் உள்ளதால் இதுபோன்ற விபத்துக்கள் எளிதில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம் என காவல்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
7 சதவீதம் அதிகம்
நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 2021ஆம் ஆண்டை விட 2022ல் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை சாலை விபத்துகளில் 2,357 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு விபத்து
இதேபோன்று ஒரு கோர விபத்து சீனாவில் நடந்துள்ளது. அதன்படி, சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் 69 பேருடன் சென்று கொண்டிருந்த பேருந்து, 3 பேருடன் எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 36 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்தின் டயர் திடீரென வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
சீனாவில் ஏராளமான பேருந்துகள் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி மரணங்கள் நேரிடுகின்றன. மேலும் போதுமான அளவில் விதிமுறைகள் இல்லாததாலும் விபத்துகள் ஏற்படுவதாக தெரிகிறது. இதேபோன்று, சில நாட்களுக்கு முன்பு, சீனாவிலுள்ள ஹுனான் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பயணிகள் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இரு வாகனங்களும் வேகமாக வந்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
Rain Alert:விடிந்தும் கொட்டும் பனி.. அடுத்த 3 மணிநேரத்தில் எங்கெல்லாம் மழை..? இதோ புதிய அப்டேட்..!
அய்யா! எங்களுக்கும் ஓய்வூதியம் தாங்க..! வழுக்கையால் பாதிக்கப்பட்டவர் விடுத்த விநோத கோரிக்கை..!