Canada Muslim Family Attack: ‛முஸ்லீம் என்பதால் கொன்றேன்’ குடும்பம் மீது லாரி ஏற்றிய இளைஞர் வாக்குமூலம்!
இந்த விபத்தில் பலியானவர்கள் அனைவரும் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் என்றும், மதத்தின் காரணமாகவே வெறுப்புணர்வுடன் அந்த குடுபத்தினரை லாரி ஏற்றிக் கொன்றதாகவும் அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கனடாவில் முஸ்லீம்கள் என்பதால் 4 பேரை லாரி ஏற்றிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஆண்டரினோ மாகாணத்தில் உள்ள ஹைட் பார்க் சாலையில் இரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். 74, 44 வயது பெண்கள், 46 வயது ஆண் மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் பலியான நிலையில், 9 வயது சிறுவன் மட்டும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டான். அவர்கள் மீது லாரி ஏற்றிய டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
Just In




PUBG Remake | 'சிக்கன் டின்னரை கொண்டாடலாம்' - எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் பப்ஜியின் ரீமேக்!
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இந்த விபத்து விசாரணை மேற்கொண்டனர். லாரி டிரைவரை வலைவீசி தேடியபோது, விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில், விபத்தை ஏற்படுத்தியவர் 20 வயது இளைஞர் என்று தெரியவந்தது.
தொடர்ந்து, அவரிடம் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததது. இந்த விபத்தில் பலியானவர்கள் அனைவரும் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் என்றும், மதத்தின் காரணமாகவே வெறுப்புணர்வுடன் அந்த குடுபத்தினரை லாரி ஏற்றிக் கொன்றதாகவும் அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து, அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை கூறினார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கனடாவில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த குடும்பம் கொல்லப்பட்டத்தை அறிந்து வருத்தம் அடைகிறேன். பயங்கரவாதத்தின் இந்த கண்டித்தக்க செயல் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வரும் முஸ்லீம்களை குறித்த பயத்தை வெளிப்படுத்துகிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.
பச்சிளம் குழந்தை விரல் துண்டான விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு