உலகம் இயங்குவதற்கு கடல்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. இயற்கையின் நுரையீரலில் பசுமையை குறிப்பிடும் வனங்கள் ஒரு பக்கம் என்றால், நீலத்தை குறிப்பிடும் கடல்களும், கடல்வாழ் உயிரினங்களும் மறுபக்கமாக உள்ளது. சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கும் கடல்களின் பாதுகாப்பை குறிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக பெருங்கடல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பூமியின் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கடல்களின் பங்கு அளவிட முடியாது. நாம் வாழும் பூமியில் நான்கில் மூன்று பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த நாளில் பெருங்கடல்களை பற்றி 10 முக்கியமான தகவல்களை பற்றி காணலாம்.
- உலகம் முழுவதும் மூன்று பில்லியன் மக்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக கடலை நம்பியுள்ளனர்.
- இந்த பூமியின் மொத்த நிலப்பரப்பில் கடல் 50 முதல் 80 சதவீதமாக உள்ளது.
- 50 முதல் 80 சதவீதம் பூமியில் பரந்து விரிந்துள்ள கடலில், ஒரே ஒரு சதவீத கடல் மட்டுமே சட்டப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
- கடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஆல்கா பூக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆல்கா பூக்களால் மீன்கள் கொல்லப்படுவதுடன், கடலை நச்சுக்களால் மாசுபடுத்துகின்றன.
- கடல்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை சேமிப்பதன் மூலம் பருவநிலை மாற்றம் அடைய உதவுகிறது. ஆனால், கரைந்த கார்பனின் அளவு அதிகமாகும்போது கடல் நீர் அதிகளவு அமிலம் ஆகிறது.
- பூமியில் மனிதர்கள் சுவாசிக்கும் 70 சதவீத ஆக்சிஜன் கடல்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது.
- உலகின் மிகப்பெரிய வாழும் கட்டமைப்பாக கடல் திகழ்கிறது.
- மனிதர்கள் இந்த பூமியில் உள்ள கடலில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே இதுவரை ஆராய்ந்துள்ளனர். இன்னும் கடல்களைப் பற்றியும், கடல் வாழ் உயிரினங்கள் பற்றியும் கண்டறிய ஏராளமான விஷயங்கள் உள்ளது.
- உலக உயிரினங்களின் உலக பதிவுப்படி, தற்போது குறைந்தது 2 லட்சத்து 36 ஆயிரத்து 878 பெயரிடப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் உள்ளது.
- உலகத்தில் 90 சதவீத எரிமலைகளின் செயல்பாடு கடலுக்கு அடியில் நிகழ்கிறது.
கடந்த சில காலங்களாகவே கடல்களில் சரக்கு கப்பல்கள், எண்ணெய் கப்பல்கள், பயணிகள் கப்பல் உள்ளிட்டவற்றாலும் மனிதர்களால் உருவான கழிவுகளும், குப்பைகளும் கடலிலும் கலந்து வருகிறது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் கடல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால், கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பதுடன் அவைகள் பல தீங்குகளை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த கடல் வாழ் உயிரினங்களை மீண்டும் மனிதர்கள் சாப்பிடுவதால் மனிதர்களும் பல்வேறு உடல்நலக்குறைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த உலக பெருங்கடல் தினத்தில் கடல்களை தூய்மையாக வைத்துக்கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்போம்.
மேலும் படிக்க : ABP நாடு Impact: மதுரை எரிவாயு மயானம் பயன்பாட்டிற்கு வந்தது!