Breaking News Live: சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை, நந்தனத்தில் 46வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணையை வரும் 10-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கோயம்புத்தூர் அருகேயுள்ள சின்ன தடாகம் ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு - 15 நாட்களில் மறுவாக்கு எண்ணிக்கைக்கான அதிகாரிகளை நியமிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு
சென்னையில் விரைவில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் அதற்கான இடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநகராட்டி மாமன்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி - பா.ஜ.ஜ. கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு. டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலை நடத்த துணைநிலை ஆளுநர் நியமித்த அதிகாரிக்கு ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் எதிர்ப்பு
A R Rahman Birthday:
“எனது வாழ்நாள் முழுவதும் என் முன்னே அன்பு, வெறுப்பு என இரண்டு விருப்பங்கள் இருந்தன, நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால் இங்கு நிற்கிறேன்”
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம், ரஹ்மான் ஆஸ்கர் வெல்ல வேண்டும் என்ற ஒட்டுமொத்த இந்தியர்களின் ஏக்கம் நிறைவேறிய சில நிமிடங்களுக்குப் பின், விருது பெற்ற கையுடன், தன் வெற்றிக்கான தத்துவத்தையும் இவ்வாறு எளிய மொழியால் விவரித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்
கடலூர் மாவட்டத்தில் 25,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும் என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி நாளை முதல் இரு நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
Arudra Darshan 2023: தமிழகம் முழுவதுமுள்ள சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்ற நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல். தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையை கடந்து 5ஜி சேவைக்கான பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், தற்போது தான் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்குவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அஷ்வினி வைஷ்னவ், 2024 ஆம் ஆண்டில் தனது சொந்த 5G டெலிகாம் சேவையை மக்களின் பயன்பாட்டுக்கு பிஎஸ்என்எல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார். முன்னதாக நடப்பாண்டிலேயே பிஎஸ்என்எல் 5ஜி சேவை தொடங்கும் என அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது அந்த திட்டம் அடுத்த ஆண்டு வரை தாமதமாகியுள்ளது.
Share Market opened : இந்திய பங்குச்சந்தை காலை சரிவுடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 183.56 அல்லது 0.30% புள்ளிகள் குறைந்து 60,172.95 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 28.75 அல்லது .30% புள்ளிகள் குறைந்து 17,938.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
Rajinikanth's Fan Died:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மன்றத் தலைவர் வி.எம்.சுதாகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். இவர் நீண்ட நாட்களாக சிறுநீரக புற்றுநோயினால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமாகியுள்ளார்.
இன்றைய விலை
இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 230ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.இன்று (ஜனவரி.06) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
திராவிட முன்னேற்ற கழக ஆட்சியானது தமிழுக்கானது; பள்ளி, கல்லூரிகள் தமிழ் மொழியிலேயே படிக்கலாம். -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் இலக்கியத் திருவிழாவில், “ மொழி என்பது ஓர் இனத்தின் உயிர்; இலக்கியம் என்பது அதன் இதயம்.’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ. 41,520 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூபாய் 38 குறைந்து ரூ.5,190 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.73.50 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.73,500ஆக விற்பனையாகிறது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46வது புத்தக கண்காட்சி இன்று தொடக்கம் - ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியை இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
Background
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்றைய விலை
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 230ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (ஜனவரி.06) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -