அழகாகவும் ரம்மியமாகவும் காட்சி அளிக்கும் சில சுற்றுலாதளங்கள் திடீரென உயிர்ப்பலி வாங்கி விடுவது உண்டு. இயற்கை சீற்றத்தாலோ, மனிதர்களின் அஜாக்கிரதையாலோ இந்த விபத்துகள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு விபத்து பிரேசிலில் நடந்துள்ளது.


பிரேசிலில் ஒரு மலையில் சிறு பகுதி அப்படியே உடைந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மலைப்பகுதியின் கீழ் படகில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இது பலத்த காயத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.


பிரேசிலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாதலம் ஃபர்னாஸ் நீர்வீழ்ச்சி. பிரேசிலின் கேபிடோலியோ பகுதியில் இது அமைந்துள்ளது. நீர் வீழ்ச்சி, படகு போக்குவரத்து என மனதை கொள்ளை கொள்ளும் சுற்றுலாதலமாக இது விளங்குகிறது. இந்நிலையில் பல சுற்றுலா பயணிகள் படகில் அழகை ரசித்துகொண்டு சென்றுகொண்டிருக்கையில் நீர்வீழ்ச்சியின் மலையின் ஒரு பகுதி உடைந்து அங்கு சென்றுகொண்டிருந்த 3 படகின் மீது விழுந்தது.  






நம்மூர் டவுன் பஸ் தேவலை... பறவை மோதி பஞ்சு பஞ்சாய் போன விமானம்; சிதறி ஓடிய பயணிகள்!


இதில் 7 பேர் உயிரிழந்தனர். தொடர் மழையே இந்த விபத்துக்கு காரணம் என அந்நாட்டு தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது ஒரு துரதிஷ்டவசமாக சம்பவம் என பலர் பதிவிட்டுள்ளனர்


பாறை இடிந்து விழும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திடீரென உடைந்து விழும் பாறையை எதிர்பாராத சுற்றுலா பயணிகள் அலறுகின்றனர். பாறை விழுந்த வேகத்தில் தண்ணீர் கடுமையாக கொந்தளித்து படகுகள் சாய்கின்றன.


Watch Video: கபடி கபடி... சடுகுடு விளையாடும் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்- வைரல் வீடியோ!






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண