ரஷ்யாவில் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது  பெண் கரடி ஒன்று,  திடீரென தனது பயிற்சியாளரை தாக்கிய பயங்கர சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிகழ்வானது, பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 


சர்க்கஸ் நிகழ்ச்சியில் கரடி தாக்குதல்:


ரஷ்யாவில் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது டோனட் என்ற 490 பவுண்டுகள் எடையுள்ள பெண் கரடி ஒன்று,  திடீரென தனது பயிற்சியாளரான செர்ஜி பிரிச்சினிச்சைத் தாக்கிய பயங்கர சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


கரடி அவரைத் தாக்கியதால், பிரிச்சினிச் கரடியிடம் இருந்து தப்பித்துக் கொள்ள, உலோகக் கம்பியைப் பயன்படுத்தி தனது உயிருக்காக தீவிரமாகப் போராடினார். ஏறத்தாழ 30 வினாடிகள் தீவிர போராட்டம் நீடித்தது. அப்போது, கூண்டுக்கு வெளியே உள்ள ஒரு நபர், கரடியிடமிருந்து அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது கரடியின் கவனத்தை சிதறடித்தார். இதையடுத்து கரடி இறுதியில் , அவரை தாக்குவதில் இருந்து பின்வாங்கியது. இதையடுத்து பயிற்றுவிப்பாளர் ஆபத்தான சூழ்நிலையில் தப்பித்தார். 


இந்த நிகழ்வானது, அங்கிருந்த பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 






விலங்கு உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை:


இந்த சம்பவமானது, விலங்குகளை வைத்து சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று விலங்கு உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது. பலர் ,  தங்களது சமூக வலைத்தளங்களில் சர்க்கஸில் விலங்குகளை தொடர்ந்து பயன்படுத்துவதை கண்டனம் தெரிவித்தனர்.


ரஷ்யாவில் விலங்குகள் உரிமைகள் பற்றிய விவாதம் நடந்து வருகிறது, 2018 ஆம் ஆண்டில் விலங்குகளை கொடுமைப்படுத்துவதை தடைசெய்யும் மசோதாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார். இருப்பினும், நிகழ்ச்சிகளில் விலங்குகளைப் பயன்படுத்துவதை சட்டம் குறிப்பிடவில்லை என்ற தகவல் தெரிவிக்கின்றன.


மேலும், சர்க்கஸில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு நாடு தழுவிய தடை கொண்டுவரும் வகையிலான மசோதாவானது, அக்டோபர் மாதம் ரஷ்யவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் இது விலங்கு உரிமைகளுக்கான நாட்டின் அணுகுமுறையில் சாத்தியமான மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Also Read: ”4 மாதங்களில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்” கலக்கத்தில் தூத்துக்குடி