✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Bangladesh: வங்கத்தில் இந்தியா செய்த தவறு? நட்பை மாற்றலாம்,அண்டை வீட்டாரை மாற்ற முடியது.! என்ன பாதிப்பு ?

Advertisement
செல்வகுமார்   |  07 Aug 2024 09:47 PM (IST)

Bangladesh Crisis Impact on India: வங்கதேசத்தில் கலவரம் வெடித்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது விமர்சனங்கள் வருவதை பார்க்க முடிகிறது.

வங்கதேசத்தில் கலவரம்: இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் இருக்கும்?

NEXT PREV

Bangladesh Crisis: வங்க தேசத்தில் மாணவர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக நாடு முழுவதும் பரவிய நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில், வங்கதேச சூழ்நிலையால் இந்தியாவுக்கு பாதிப்புகள் உள்ளனா?, அவை என்ன என்பது குறித்து பார்ப்போம் . 

Continues below advertisement

வங்க தேசத்தில் என்ன பிரச்னை:

வங்க தேசத்தில் 2009 ஆம் ஆண்டு பிரதமராக இருந்து வருகிறார் ஹசீனா. இவர், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் போக்கிலும், கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஒடுக்குமுறைகளை கையாண்டதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. மேலும், தேர்தலை சுதந்திரமாகவும் நடத்தவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுகிறது. இதனால், எதிர்க்கட்சிகள் போட்டியிடாத சூழ்நிலையினாலும், அடக்குமுறைகளாலும் , ஆட்சியில் தொடர்ந்து நீடித்ததால், ஹசீனாவுக்கு எதிரான போக்கு மக்கள் மத்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

இந்த தருணத்தில், 1971 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, தற்போது மாணவர்கள் நடத்திய போராட்டமானது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல பற்றியது. இந்தப் போராட்டமானது நாடு முழுவதும் பரவிய நிலையில், கட்டுப்படுத்த முடியாமல், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் கொண்டுள்ளார். 

இவரது ஆட்சி காலத்தில், பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் இந்தியாவைவிட ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் அதிகம் உள்ளது என்றும் கூறபட்டாலும், இவர் மக்களாட்சி எதிரான போக்குதான் இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது என்றும் பார்க்கப்படுகிறது

Also Read: Jaishankar Explains: ஹசீனாவுக்கு அனுமதி ஏன்; இந்தியாவின் நிலை என்ன?: ஜெய்சங்கர் விளக்கம்...!

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு:

பிரதமராக இருந்த ஹசீனா , இந்தியாவுடன் மிகவும் நட்புடன் இருந்து வந்தார். வங்கத்தில் , தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை, மக்களாட்சின் சிதைக்கப்படுகிறது என பல நாடுகள் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, இந்தியா எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் ஹசீனாவுடன் நட்பு பாராட்டியே வந்தது. ஆனால், வங்காள தேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான  பங்களாதேஷ் தேசியவாத கட்சி ( Bangladesh Nationalist Party ) , பாகிஸ்தானுடன் நட்பு கொண்ட கட்சியாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் , ஹசீனா கட்சி ஆட்சிக்கு வருவது மிக கடினம். இந்த சூழ்நிலையில், பங்களாதேஷ் தேசியவாத கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கு எதிரான போக்குதான் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 

சில இடங்களில் ஹசினாவுக்கு எதிரான போக்கானது, இந்தியாவுக்கு எதிரான குரல்கள் எழுவதை பார்க்க முடிகிறது. சில இடங்களில் , இந்தியர்கள் மீது தாக்குதல் நடப்பதாகவும் தகவல் வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இந்தியாவின் ஒரு கட்சிக்கு சார்பு  கொள்கையால், மற்றொரு கட்சி ஆட்சிக்கு எதிரான போக்கு உருவாகிறது என கூறப்படுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் மாலத்தீவிலும் இந்தியாவுக்கு எதிரான போக்கு ஏற்பட்டது. தற்போது, இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை , மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக உள்ளன. பாகிஸ்தானும் எதிரான போக்குடன் உள்ளது. தற்போது வங்காள தேசமும் , அந்த சூழ்நிலையில்தான் உள்ளது. 

அண்டை நாடுகளுடனான நட்புறவானது மிகவும் இன்றியமையாதது, ஏனென்றால் தீவிரவாதம்- பயங்கரவாதம் உட்புகுவதற்கு எளிதான நிலை ஏற்பட்டுவிடும் . இந்த தருணத்தில், வெளியுறவுக் கொள்கை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எதிரான கருத்துகள் வருவதையும் பார்க்க முடிகிறது. நண்பர்களை கூட மாற்ற முடியும், ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது; எனவே அண்டை நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையில் இந்தியா எடுக்கும் முடிவுகள் மிகவும் இன்றியமையாததாகும். 

Also Read: Sunita Williams: விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்: உடல்நலனில் சிக்கல் அபாயம்?

Published at: 07 Aug 2024 09:47 PM (IST)
Tags: bangladesh violence Sheikh Hasina Bangladesh Bangladesh crisis
  • முகப்பு
  • செய்திகள்
  • உலகம்
  • Bangladesh: வங்கத்தில் இந்தியா செய்த தவறு? நட்பை மாற்றலாம்,அண்டை வீட்டாரை மாற்ற முடியது.! என்ன பாதிப்பு ?
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.