வங்க தேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தியது , நாடு முழுவதும் பரவிய நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், மாநிலங்களவையில், வங்கதேச விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
”அடைக்கலம் கோரினார் ஹசினா”
ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, வங்கதேசத்தில் , கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. அங்கு நிலைமை மோசமடைந்ததால், பிரதமராக இருந்த ஹசீனா விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவரது கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அடைக்கலம் கொடுக்கப்பட்டது.
“பாதுகாப்பு பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாக தெரிகிறது. மிகக் குறுகிய அறிவிப்பில், இந்தியாவுக்கு வருவதற்கு ஒப்புதல் கோரினார்.
அங்கு நிலைமை மோசமடைந்ததால், பிரதமராக இருந்த ஹசீனா விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று மாலை டெல்லிக்கு வந்தார்.
இந்தியர்கள் நிலை என்ன?
வங்கதேசத்தில் உள்ள இந்திய சமூகத்துடன, தூதரக பணிகள் மூலம் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். அங்கு 19,000 இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் சுமார் 9,000 மாணவர்கள் உள்ளனர் . கடந்த ஜூலை மாதம் பலர் தாயகம் திரும்பியிருக்கிறார்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில், எல்லைக் காவல் படையினர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கு சிறும்பான்மையினர்கள் தாக்கப்படுவதாக வரும் தகவல் கவலை அளிக்கிறது. அங்கு இருக்கும் அரசுகளுடன் தொடர்பில் உள்ளோம். இந்தியாவின் தரப்பின் கருத்தையும் தெரிவித்து வருகிறோம்
பற்றி எரியும் வங்கதேசம்:
இதுகுறித்து வங்கதேச உயர்மட்ட அதிகாரிகள் கூறுகையில், நிலைமை மோசமாவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்புதான், தலைநகர் டாக்காவில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு ஷேக் ஹசீனா சென்றுள்ளார்.
பெரும் நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து அவர் விலகினார்."அவரும் (ஷேக் ஹசீனா) அவரது சகோதரியும் கணபாபனிலிருந்து (பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம்) பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர் என தெரிவித்திருந்தனர்.
வங்கதேசத்தில் வரலாறு காணாத போராட்டம் உச்சம் தொட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகக் கோரி நடந்து வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பிரதமர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால், வங்கதேசத்தில் அமைதியின்மை சூழல் நிலவி வருகிறது.