ஆசையாக மீன் சாப்பிட்ட பெண் இரண்டு கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் சம்பவம் அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. 


கை, கால்கள் அகற்றம்:


அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த லாரா பராஜஸ் என்ற 40 வயது பெண்ணிற்கு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் லாராவுக்கு அறுவை சிகிச்சை மூலம் கை, கால்கள் அகற்றப்பட்டுள்ளன. மூச்சு விடமுடியாமல் தவிக்கும் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த அளவுக்கு அந்த பெண்ணின் உடல்நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்ற கேள்விக்கு சாதாரண மீன் தான் காரணம் என கூறப்படுகிறது.


மீன் சாப்பிட்டதால் பாதிப்பா?


இது குறித்து பேசிய லாராவின் தோழியான மெசினா, “ லாரா தனது வீட்டின் அருகில் இருக்கும் சான் ஜோஸ் பகுதியில் இருக்கும் மார்க்கெட்டிற்கு சென்று திலேபி மீனை வாங்கி வந்துள்ளார். அதை அவரே சமைத்து சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர் லாராவின் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அவரது கை விரல்கள், கால்கள், கீழ் உதடுகள் கருப்பு நிறமாக மாறியது. சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளன. கோமாவுக்கு சென்ற லாரா கிட்டத்தட்ட மரணமடைந்த நிலையில் உள்ளார். யாருக்கும் இது போன்ற கொடுமை நடக்க கூடாது” என கண்ணீருடன் கூறியுள்ளார். 


காரணம் இதுதான்


லாராவுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசிய மருத்துவர்கள், அவரது உடலில் விப்ரியோ வல்னிஃபிகஸ் (Vibrio vulnificus) என்ற பாக்டீரியாவின் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் லாராவின் உடல் செயலிழந்து விட்டதாகவும், உயிர் வாழ்வதற்காக அவரது கை, கால்களை அகற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். லாரா சாப்பிட்ட திலேபியா மீனில், விப்ரியோ வல்னிஃபிகஸ் பாக்டீரியா இருந்துள்ளது. மீனை சரியாக சமைத்து சாப்பிடாததால், லாராவின் உடலில் பாக்டீரியாவின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சி அளித்துள்ளது.


ஆண்டுக்கு 80 பேர் பாதிப்பு:


கடலில் வாழும் எண்ணற்ற விஷத்தன்மையுள்ள உயிர்களில் விப்ரியோ வனிஃபிகஸ் பாக்டீரியாவும் ஒன்று என கூறப்படுகிறது. இந்த பாக்டீசியா கடல் உயிரினங்களில் வாழக்கூடியது. அதை மனிதர்கள் சாப்பிடும் போது அவர்களின் உடலிலும் தஞ்சம் அடையக்கூடியது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை கடல்நீரின் வெப்பம் அதிகரிப்பதால் உயர்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 


கொடிய விஷமுள்ள இந்த பாக்டீரியாவில் அமெரிக்காவில் ஆண்டு தோறும் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றனர். பாக்டீரியாவின் பாதிப்பால் வயிற்று வலி, பேதி, வாந்தி, உடல் வலி, உடலில் சிகப்பு தன்மை ஏற்படும் என கூறப்படுகிறது. இப்படி ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியா மெக்சிகோவில் கடல்பகுதிகளில் அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க: India-Canada: கனடாவில் உச்சக்கட்ட பதற்றம்... இந்தியாவில் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொலை!


Elon Musk: X-ஐ இனி பயன்படுத்தினால் காசு கட்டணும்.. புதிய குண்டை தூக்கிப்போட்ட எலான் மஸ்க்..! எவ்வளவு தெரியுமா?