உலகளில் பல வகையான ஆள் மாறாட்ட புகார்களை நாம் கேட்டிருப்போம். ஆனால் அதிலிருந்து சற்றும் மாறுபட்ட ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. அதில் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளன. அப்படி என்ன தான் நடந்தது? இந்த சம்பவத்தில் உள்ள ஆச்சரியமான விஷயம் என்ன?
அமெரிக்காவின் மிசோரி பகுதியைச் சேர்ந்தவர் லாரா ஒக்லெஸ்பி(40). இவர் தன்னுடைய மகளுடைய போட்டோவை பயன்படுத்தி பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதாவது இவர் தன்னுடைய மகளின் படத்தை பயன்படுத்தி ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க சேர்ந்துள்ளார். அத்துடன் தனக்கு 20 வயது என்று கூறி பலரையும் நம்ப வைத்துள்ளார்.
மேலும் தான் ஒரு மாணவி என்று கூறி சுமார் 19 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவற்றை பெற்றுள்ளார். இவை தவிர ஸ்நாப்சேட்டில் ஒரு கணக்கை தொடங்கியுள்ளார். அந்த கணக்கில் தன்னுடைய மகள் படத்தை வைத்து பல இளைஞர்களுடன் பேசி பண மோசடி செய்துள்ளார். அத்துடன் அவருடைய மகள் பெயரை வைத்து ஒரு ஓட்டுநர் உரிமத்தையும் இவர் பெற்றுள்ளார்.
கடைசியாக இவர் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கு இருந்தவர்களிடம் அவர் ஒரு குடும்ப வன்முறையை சந்தித்த பெண் என்று கூறி ஏமாற்றியுள்ளார். அவருடைய கடன் தொகை தொடர்பாக விசாரணை நடத்திய போது ஒக்லெஸ்பி ஏமாற்றியது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் காவலர்கள் இவரை கைது செய்து விசாரணை நடத்தினர்,
இந்த விசாரணையின் முடிவில் அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒக்லெஸ்பியை கடுமையாக கண்டித்தார். மேலும் அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தார். தன்னுடைய மகளை போல் நடித்து ஏமாற்றிய குற்றத்திற்கு மகளுக்கும் பல்கலைக்கழக்கத்திற்கும் சேர்த்து 13 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: உக்ரைன் எல்லையில் படைகளை குவிக்கும் ரஷ்யா.! சத்தமில்லாமல் போருக்கு தயாராகிறாரா புதின்?