ரஷ்யாவுக்கும், உக்ரன் நாட்டிற்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளது. தனது நாட்டின் எல்லைப் பகுதியில் 90,000க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா அத்துமீறிக் குவித்துள்ளதாக உக்ரைன் நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.   

  


கடந்த 2014ம் ஆண்டில் உக்ரைன் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த  கிரிமியா நாட்டை ரஷ்யா தனது நாட்டுடன் இணைத்தது. 2ம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் நடந்த முதல் ஆக்கிரமிப்பு இதுவாகும். இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யா நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தது.  


பின்னணி: 


கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள உக்ரைன்  ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கிறது.  ரஷியா, உக்ரைனுக்கும் இடையே ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியிலான பிணைப்புகள் இருந்து வருகின்றன. உக்ரைனில் நாட்டில் பெரும்பாலானோர் ரஷியா மொழியை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். இருப்பினும், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தேவைகளில் ஐரோப்பிய நாடுககளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதையே உக்ரைன் அரசு விரும்புகிறது.



 


நேட்டோ கூட்டுப் பாதுகாப்பு முறையில் உக்ரைன் நாட்டைக் கொண்டு வர மேற்கத்திய நாடுகள் தவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே,  கிரிமியாவை 2014 இல் ரஷியா கையகப்படுத்தியது. 


தற்போதைய மோதல் போக்குக்கு காரணம் என்ன? 


ரஷியா- உக்ரைன் இடையேயான் மோதல் போக்கிற்கு, Nord Stream 2 (NS-2) என்று சொல்லக்கூடிய குழாய்வழி இயற்கை எரிவாயுத் திட்டம் முக்கிய காரணமாக அமைகிறது. எரிவாயு உற்பத்தி செய்யும் நாடுகளில் உலகிலேயே முதன்மையாக இருப்பது ரஷ்யா.  ஐரோப்பா நாடுகளின் 50% இயற்கை எரிவாயு பயன்பாடு ரஷ்யாவை சார்ந்து உள்ளது. சோவியத் ஒன்றியம் காலத்தில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற குழாய்வழி எரிவாயுத் திட்டங்கள் மூலம் ரஷியா மற்றும் ஐரோப்பா நாடுகள் இணைக்கப்பட்டது. இந்த எரிவாயு திட்டத்தின் மூலம் பெறப்படும் சேவை கட்டணம் (Transit Fee) உக்ரைன் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக இருந்து வருகிறது.                 


இந்நிலையில், கருங்கடல் (Black Sea) பால்டிக் கடல் (Baltic Sea) வழியாக ரஷியா தனது புதிய NS-2 குழாய்வழி இயற்கை எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  உக்ரைன் நாட்டுடன் இணைக்கப்படாமல்,1200கி.மீ நீளமுள்ள இந்த திட்டம்  ஐரோப்பா நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை வழங்க இருக்கிறது. ரஷியாவின் இந்த செயல்பாடு, உக்ரைன் அரசை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.      


 



நன்றி - The Economist


 


இதற்கிடையே, இங்கிலாந்து நாட்டுடன் போடப்பட்ட ராணுவ ஒப்பந்தத்தின் படி,  நாட்டின் தெற்கு, தென் கிழக்குப் பகுதிகளில்  கடற்படை  தளத்தை (Ochakiv மற்றும் berdyansk) உக்ரைன் அரசு கட்டி வருகிறது. இது, நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் என ரஷியா கருதுகிறது. இந்த சூழ்நிலையில் தான், தனது நாட்டின் எல்லைப் பகுதியில் 90,000க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா அத்துமீறிக் குவித்துள்ளதாக உக்ரைன் நாடு குற்றஞ்சாட்டியுள்ளது. 



பால்டிக் கடல் 


கிழக்கு ஐரோப்பியா நாடுகளின் நிலைத்தன்மையில் ரஷியா அதிபர் புதினின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமெரிக்கா போன்ற நாடுகள் கணித்து வருகின்றன. உக்ரேனின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மல்தோவா நாட்டில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத குழுக்களுக்கு ரஷியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. மேலும், NS-2 குழாய் திட்டம் மூலம், பால்டிக் கடலில் தனது இருத்தலை ரஷ்யா அதிகரிக்கும்  என்று கணக்கிடப்படுகிறது. லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய பால்டிக் நாடுகளில் பிரிவினைவாதம் தலைதூக்கி காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.