பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று கராச்சி. கராச்சியில் நடைபெற்ற கொடூர கொலை ஒன்று அந்த நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கராச்சி நகரத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் உயிரிழந்த நிலையில் ஒருவரது கை மட்டும் தெரிவதாக அந்த நகர போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு சென்ற போலீசார் கண்ட காட்சி அவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடை வைத்தது. தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதும், அந்த அடுக்குமாடி குடியிருப்பை திறந்துள்ளனர். காவல்துறையினர் அறையை திறந்தவுடன் அந்த அறை முழுவதும் தலை மற்றும் கை தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் ஒன்று கிடந்துள்ளது. அந்த அறையில் மனித உடலின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி, அறை முழுவதும் பரவிக்கிடந்துள்ளது. அந்த பெண்ணின் ஆடைகள் முழுவதும் ரத்தக்கறைகள் படிந்துள்ளது. அந்த அறை முழுவதையும் கண்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மற்றொரு அறையில் பெண் ஒருவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். போதையில் இருந்த அந்த பெண் உடையில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், உடலை வெட்டுவதற்கான ஆயுதங்களும் அவர் அருகில் கிடந்தது. அவர் படுக்கையின் அருகில் உயிரிழந்தவரின் கைகளும் இருந்துள்ளது. உடனடியாக போலீசார் அந்த பெண்ணை எழுப்பி கைது செய்தனர். அவரிடம் உயிரிழந்தவர் அந்த பெண்ணின் கணவரா? என்று போலீசார் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் உயிரிழந்தவர் தனது கணவர்தான் என்றும், 60 வயதான அவரது பெயர் முகமது சோஹைல் என்றும் கூறினார், ஆனால், சிறிது நேரத்தில் அவர் தனது கணவர் இல்லை என்றும், அவர் தனது மைத்துனர் என்றும் கூறினார். இதனால், காவல்துறையினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மேலும், 45 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மதுபோதையில் இருந்ததாலும் போலீசார் விசாரணைக்கு அந்த பெண்ணால் முழுவதும் ஒத்துழைக்க முடியவில்லை.
அதே நேரத்தில், அந்த பெண் போலீசார் நடத்தும் விசாரணையில் மிகவும் அமைதியாகவே இருப்பது தங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கராச்சி நகரின் காவல்துறை அதிகாரி ஜூபைர் ஷேக் தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபர் கராச்சி நகருக்கு அருகில் உள்ள சதார் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு அங்கு குடும்பம் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபரும், கைது செய்யப்பட்ட பெண்ணும் லிவ் இங் டு கெதர் முறைப்படி பல நாட்கள் அங்கு வாழ்ந்து வந்ததாகவும், பணத்திற்காக இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள் என்றும் அக்கம்பக்கத்தினர் வாக்குமூலம் மூலமாக கண்டறிந்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்