அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் நேற்று கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் லேசான அறிகுறிகளை மட்டுமே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அவரது கணவர் அதிபர் ஜோ பைடனுக்கு தொற்று பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், அதிபருக்கு தொடர்ந்து பரிசோதனை செய்யப்படும் எனவும், அதுவரை அவரது மனைவி ஜில் பைடன் டெலாவேரில் உள்ள ரெஹோபோத் கடற்கரையில் இருக்கும் வீட்டில் இருப்பார் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புதிய வகை கொரோனா வைரஸின் மாறுபாடான பிரோலா தற்போது வேகமாக பரவி வருகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூற்றுப்படி, இந்த மாறுபாடு மிகவும் வேகமாக பரவி வருவதாகவும், BA.2.86 மாறுபாடு ஏற்கனவே கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அல்லது கொரோனா தடுப்பூசிகளைப் பெற்ற நபர்களை தாக்கும் திறனை கொண்டது இந்த வைரஸ் மாறுபாடு என தெரிவித்துள்ளது. மேலும் இது டெல்டா வகை மாறுபாட்டை ஒப்பிடும் போது இதன் தாக்கம் சற்று குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
BA.2.86 மாறுபாடு முதன்முதலில் 24 ஜூலை 2023 அன்று அடையாளம் காணப்பட்டது, ஒமிக்ரானின் BA.2.86 பரம்பரையானது, XBB.1.5 உடன் ஒப்பிடுகையில் வைரஸின் முக்கிய பகுதிகளில் 35 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டிருப்பதால் உலக நாடுகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. XBB.1.5, 2023 ஆம் ஆண்டின் மிகவும் தாக்கத்தை உண்டாக்கிய மாறுபாடு ஆகும். கனடா மற்றும் டென்மார்க் தவிர, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் BA.2.86 மாறுபாட்டினால் ஏற்பட்ட தொற்றை உறுதிபடுத்தியுள்ளது. இந்த தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Xi Jinping: டெல்லி உச்சி மாநாட்டை புறக்கணிக்கிறாரா சீன அதிபர்? அமெரிக்க அதிபர் பரபர பதில்