America Gunshot : அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் அமெரிக்காவில் 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கி சுடுதல் சம்பவத்தில் சிலர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
5 பேர் உயிரிழப்பு
கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிக் சூடு நடத்தப்பட்டதில் 8 வயதுடைய குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை காவல்துறை அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.31 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 5 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,”டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள சோனியா அர்ஜென்டினா குஸ்மான் (25), டயானா வெலாஸ்குவேஸ் (21), ஜூலிசா மோலினா ரிவேரா (31), ஜோஸ் காசரெஸ் (18), டேனியல் என்ரிக் லாசோ (8) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்திருக்கலாம். சந்தேகத்தின்படி அவரை தேடி வருவதாக" போலீசார் தெரிவித்தனர்.
அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் அமெரிக்காவில் 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட டென்னிசி, நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ பள்ளியில் நேற்று ஒரு பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும் படிக்க