America : அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்து நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடும் பனிப்புயல்
அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலை நிலவி வருகிறது. அங்கு பெரும்பாலான பகுதிகளில் சூறாவளி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடந்த வாரத்தில் இருந்தே அமெரிக்காவில் பல பகுதிகளில் கடும் பனிப்புயல் நிலவுவதால் அப்பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த பனிப்புயலால் பல வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பல பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும், கடும் பனியால் சாலைகள்ல நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது. இதனால் நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு இல்லாமல் விபத்துகளும் ஏற்படுகின்றன.
21 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவை தற்போது வாடிவதைக்கும் பனிப்புயலால் தற்போது வரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
இந்த பனிப்புயலால் பலர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் கூட அவதி அடைந்து வருகின்றனர். ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கே பல மணி நேரம் ஆகுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
அவசர நிலை அறிவிப்பு
அமெரிக்காவின் ஏப்ரல் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கடுமையான புயல் வீசும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதிகபட்ச காற்றின் வேகம் மத்திய அட்லாண்டிக் பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் எட்டக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் சாரா ஹக்கபி அவசர நிலையை அறிவித்துள்ளார். இந்த கடுமையான புயலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செய்லபட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த பனிப்புயலால் தற்போது வரை 21 பேர் உயிரிழந்த நிலையில், அவசர நிலை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
போதை.. பணம் கேட்டு பெற்றோருக்கு தொந்தரவு: பிரிட்டனில் இந்திய வம்சாவளி நபருக்கு சிறை..