அமேசான் நிறுவனம் தன்னுடைய பல தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது. அவற்றில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்று என்றால் அது அமேசானின் அலெக்ஸா அசிஸ்டுதான். இந்த கருவி நாம் கேட்கும் பல விஷயங்களுக்கு பதிலளிக்கும். அத்துடன் இது பல மின்னணு கருவிகளையும் கட்டுபடுத்தும் திறன் கொண்டது. இதன்காரணமாக இதை உலகம் முழுவதும் பலரும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 


இந்நிலையில் இந்த கருவி அண்மையில் ஒரு சிறுவனக்கு கொடுத்த சவால் மூலம் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி,அவருடைய 10 வயது மகன் அலெக்ஸாவிடம் ஒரு சவாலை கேட்டுள்ளார். அதற்கு அலெக்ஸா, ஒரு மொபைல் போன் சார்ஜரை எடுத்து அதை ஒரு பாதி அளவு மட்டும் சார்ஜ் செய்யும் சாக்கெட்டில் வைத்து மற்றொரு பாதியை கையால் தொட வேண்டும் என்று கூறியுள்ளது. அத்துடன் அதற்கு 20 நிமிடம் கால அவகாசத்தையும் அலெக்ஸா அளித்துள்ளது. 






இது மிகவும் அபத்தான சவால் என்று அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது டிக்டாக் தளத்தில் கடந்த ஆண்டு ‘வால் அவுட் சேலஞ்ச்’ என்ற பெயரில் பிரபலமாக பரவி கொண்டிருந்தது. அந்த சவாலை தற்போது அலெக்ஸா கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த சவாலை அந்த குழந்தை செய்யாமல் இருந்துள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் நிகழாமல் இருந்துள்ளது. இருப்பினும் இந்த சவால் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இந்த சவால் தொடர்பாக அமேசான் நிறுவனத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக அலெக்ஸா தயாரிப்பு குழு ஆராய்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அமேசானின் அலெக்ஸா இணையதளத்திலிருந்து தான் இதுபோன்ற சவால்களை எடுக்கும் என்பதால் அதன் வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண  


மேலும் படிக்க: மின்னல் தாக்கியும் நல்வாய்ப்பாய் உயிர்பிழைத்தவர்.. பதறவைக்கும் காட்சிகள்..