உலகத்தில் பயணம் செய்ய விரும்பவோர்களுக்கு பல இடங்கள் இயற்கை எழில் சூழ்ந்து உள்ளன. ஆனால் ஒரு சில இடங்களுக்கு ஒரு குறிப்பிட்ட மாதம் அல்லது நேரத்தில் சென்றால் தான் அதன் இயற்கை எழிலை சிறப்பாக ரசிக்க முடியும். அப்படிபட்ட ஒரு இடம் தான் யோஸ்மைட் தேசிய பூங்கா. இந்தப் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் ஒரு இயற்கை சம்பவம் இங்கு நடைபெறும் அதை பார்க்க பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் குவிந்து இருப்பார்கள். அது என்ன?


அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் அமைந்துள்ள யோஸ்மைட் தேசிய பூங்காவில் பிப்ரவரி மாதம் ஃபயர்ஃபால் நிகழ்வு நடைபெறும்.


ஃபயர்ஃபால் என்றால் என்ன?


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள ஹார்ஷ் டெயில் ஃபால்ஸிற்கு 90 டிகரி திசையில் சூரியன் இருக்கும். இந்த சமயத்தில் சூர்ய அஸ்தமனத்தின்போது அந்த நீர்வீழ்ச்சியிலிருக்கும் தண்ணீர் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும். அது பார்ப்பதற்கு நெருப்புக்குழம்பு மேலே இருந்து கீழே விழுவதுபோல் இருக்கும். இந்த நிகழ்வு தான் ஃபயர்ஃபால் என்று அழைக்கப்படுகிறது. 






ஃபயர்ஃபால் எப்போது நடைபெறும்?


ஃபயர்ஃபால் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரம் வரை நடைபெறும். வரும் 2022-ஆம் ஆண்டு இந்த நிகழ்வு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும். ஆகவே இந்தாண்டு இந்த நிகழ்வை பார்க்க நினைப்பவர்கள் சரியாக அந்த நாட்களில் கலிஃபோர்னியாவிலுள்ள இந்த இடத்தை பார்க்க செல்லலாம். 


2019ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வின் வீடியோ:






இந்த ஃபயர்ஃபாலை பார்க்க நினைக்கும் நபர்கள் சில விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும். அதாவது அந்த இடத்திலிருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்துதான் அதை பார்க்க வேண்டும். மேலும் மதியம் 2.00 மணி முதல் இதை பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இடத்திற்கு செல்லும் வழியில் தீவிரமாக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பயணிகளை அதை சரியாக உணர்ந்து பயணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: ‛அங்கே தான் அழகா இருப்பாங்க...’ 2வது திருமணம் செய்ய ரஷ்யா புறப்பட்ட ‛டால்’ மேன்!