மழை காலங்களில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் மழை காலங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி இருக்கும் சூழல் உருவாகும். அந்த தண்ணீரில் நடப்பது மற்றும் வாகனங்களை இயக்குவது ஆகியவற்றில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் மழை பெய்யும் போது இடி மற்றும் மின்னல் இருக்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அந்த சமயங்களில் மரத்திற்கு அருகே செல்வது மற்றும் ரேடியோ சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்படி ஒருவர் மழை காலத்தில் ரேடியோ சாதனத்தை பயன்படுத்தி மின்னல் தாக்கி உயிர் தப்பி பிழைத்துள்ளார். 


இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,”இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் பணியில் இருந்த போது வாக்கி டாக்கி பயன்படுத்தியுள்ளார். அப்போது மழை காரணமாக மின்னல் வெட்டியுள்ளது. அந்த மின்னல் அவரை பலமாக தாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இருப்பினும் இனிமேல் மின்னல் காலங்களில் ரேடியோ பொருட்களை பயன்படுத்துவதை தவிருங்கள். இந்த நபர் 4 நாட்கள் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்துள்ளார். அனைவரும் இப்படி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை. ஆகவே இதை நிச்சயம் செய்யாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.






மேலும் இந்த ட்வீட்டர் பதிவுடன் அந்த நிறுவனத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சியையும் பதிவிட்டுள்ளார். அந்த காட்சிகள் மிகவும் பதைபதைக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்தப் பதிவை பலரும் வியந்து பார்த்து வருகின்றனர். மேலும் உயிர் பிழைத்தது மிகப்பெரிய அதிசயம் என்று தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண  



மேலும் படிக்க: ‛அங்கே தான் அழகா இருப்பாங்க...’ 2வது திருமணம் செய்ய ரஷ்யா புறப்பட்ட ‛டால்’ மேன்!