39 வயதான சுல்தான் கோசென் என்ற விவசாயி துருக்கி நாட்டின் மார்டின் நகரில் பிறந்தவர். சிறுவயதில் இவருக்கு பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி ஏற்பட்டதால், ஜைஜாண்டிசம் நோயால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவரது உடலில் வளர்ச்சிக்கான ஹார்மோன் அதிகமாக சுரந்தது. இதனால் தற்போது இவர் உலகிலேயே மிக உயரமான மனிதராக வலம் வருவதோடு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறார். 






 


இது ஒரு புறம் சாதனையாக இருந்தாலும், பர்சனல் வாழ்கையில் இந்த உயரம் அவருக்கு ஏராளானமான தொந்தரவுகளை கொடுத்து வருகிறது. (தற்போது அவரின் உயரம் 8” 3 ( 251 செ. மீ)


இவருக்கும் சிரியா நாட்டைச் சேர்ந்த மேர்வ் டிபோ ( 175  செ.மீ) என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கோசெனுக்கு துருக்கி மொழி மட்டுமே தெரிந்த நிலையில், மேர்வ் டிபோ அரபி மொழி மட்டுமே தெரிந்த நபராக இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மொழிப் பிரச்னை நீண்ட காலமாகவே சிக்கலை ஏற்படுத்தி வந்துள்ளது. 


இந்த சிக்கல் ஒரு கட்டத்தில் அவர்களை விவாகரத்து வரை கொண்டு வந்து விட்டது. இந்த விவாகரத்தால் தனது மகளையும், மகனையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு சுல்தான் தற்போது கோசெனிடம் வந்துள்ளது. இதனால்  இன்னொரு திருமணம் செய்ய முடிவெடுத்த சுல்தான் கோசென் தனக்கான துணையை ரஷ்யாவில் தேட இருக்கிறாராம். இதற்காக இந்த மாத  தொடக்கத்திலேயே ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்திற்கு சுல்தான் கோசென் வந்ததாகச் சொல்லப்படுகிறது. 






 


இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சுல்தான் கோசென் கூறும் போது, “எனக்கான துணையை தேட நான் ரஷ்யாவை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் ரஷ்யப் பெண்கள் அழகின் உச்சமாகவும், அன்பான ஆன்மாவை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.   


இது மிகவும் எளிதான விஷயம், என்னை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிற்கு தேவையான அனைத்தையும் நானே பார்த்துக்கொள்கிறேன். அவர்கள் எனது குழந்தைகளை மட்டும் நன்றாக பார்த்துக்கொண்டால் போதும் என்று கூறியுள்ளார்.