Amazon : ஜூன் 1ஆம் தேதி முதல் அமேசானில் ஷாப்பிங் செய்யும்போது பயனர்கள் அதிக செலவிட வேண்டியிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அமேசான்
முன்பெல்லாம் எந்த ஒரு பொருளை வாங்கும்போதும் நேரடியாக கடைக்குச் சென்று பொருளை பார்த்து, விலைபேசி வாங்குவதில் தான் ஒரு திருப்தியும் கொண்டிருந்தனர். ஆனால், காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பதைப்போல, மனித வாழ்வியலையே இணைய சேவை மாற்றியுள்ளது. அதற்கு உதாரணமாக தான், சோம்பேறித்தனம் அதிகமாகி ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என வீட்டை விட்டு கூட வெளியே வராமல், ஆன்லைன் மூலமே அனைத்து பொருட்களையும் வாங்கி குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமேசான் நிறுவனம் அதன் விற்பனை கட்டணம் மற்றும் கமிஷன் கட்டணத்தை திருத்தியுள்ளது. இந்த திருத்தப்பட்ட விலையானது ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எந்த பொருட்களின் விலை உயர்வு?
அமேசான் நிறுவனம் அதன் விற்பனையாளர் கட்டணம் மற்றும் கமிஷன் கட்டணங்களை உயர்த்துவதால் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.
அதன்படி, அழகு சாதனப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், ஆடைகள், மருந்துகள் உள்ளிட்ட பல பொருட்கள் விலை உயர வாய்ப்பு உள்ளது. பொருட்களின் நேரடி விலை உயர்வு தவிர, தயாரிப்பைத் திரும்பப் பெறுவது தொடர்பான தளத்தின் கட்டணங்களும் உயர்த்தப்பட வாய்பப்பு உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும்.
எவ்வளவு விலை உயரும்?
ரூ.500 அல்லது அதற்கு குறைவான விலையில் கிடைக்கும் மருந்துகளின் விற்பனையாளரின் கட்டணத்தை 5.5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, ரூ.500 அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள பொருட்களுக்கு இந்த கட்டணம் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் கருவிகள், இன்வெர்ட்டர்கள், பேட்டரிகள் போன்ற சில பொருட்களுக்கு கட்டணத்தை குறைத்துள்ளது அமேசான். மேலும், எலக்ட்ரானிக்ஸ், மரச்சாமான்கள், சமையலறை உபகரணங்கள், வீட்டுப் பொருட்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காரணம்
போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு அவசியமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிப்பிங் செய்ய உயரும் செலவுகளை நிர்வகிப்பதில் அமேசான் நிர்வாகம் பெரும் சவால்களை எதிர்கொள்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் விலை உயர்வு மூலம் வாடிக்கையாளர்கள் பிற ஈ-காமர்ஸ் தளங்களுக்கு மாறவும் துண்டலம் என்று தெரிகிறது.
மேலும் படிக்க