மே 19, நேற்றைய  தினம் வானியல் ஆராய்ச்சியாளர்களால் பிளாக் மூன் என்றழைக்கப்படும். அறிவியல் செய்திகள் ரிப்போர்டிங் செய்வதில் தேசிய விருது வென்ற பத்திரிகையாளர் சாரிகா காரு இது பற்றி விளக்கியுள்ளார்.


வெள்ளிக்கிழமை அன்று வரும் அமாவாசையை தான் பிளாக் மூன் எனக் கூறுகிறார்கள்.
பிளாக் மூன் என்றால் என்ன?


இந்த ஆண்டு வசந்த காலத்தில் மட்டும் அதாவது இந்த 3 மாதங்களில் 4 அமாவாசை ஏற்படும். மார்ச் 21ல் ஆரம்பித்து ஜூன் 21ல் முடிந்துவிடும். இதில் மூன்றாவது அமாவாசை தான் இன்று நடைபெறுகிறது. இந்த பருவத்தில் வரும் மூன்றாவது அமாவாசையைத் தான் பிளாக் மூன் என்று கூறுகின்றனர், கடந்த சில ஆண்டுகளாகத் தான் இந்த பிளாக் மூன் நிகழ்வு பிரபலமாகியிருக்கிறது, ஆனால் இன்னும் சிலர் பிளாக் மூன் என்ற நிகழ்வு 33 மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்வது எனக் கூறுகின்றனர்.


இன்னொரு விளக்கமானது ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் இருந்தால் அதில் இரண்டாவது அமாவாசையை பிளாக் மூன் எனக் கூறுகின்றனர். பிளாக் மூன் அவ்வாறாக கணக்கிட்டால் 29 மாதங்களுக்கு ஒரு முறை வரும் எனக் கூறுகின்றனர். பிப்ரவரியில் அமாவாசை இல்லாவிட்டால் ஜனவரி மற்றும் மார்ச்சில் 2 அமாவாசைகள் வரும். அதை பிளாக் மூன் எனக் கூறுகின்றனர். கருப்பு நிலவு அமாவாசையுடன் தொடர்புடையது, இந்த கட்டத்தில் சந்திரன் எப்போதும் கருப்பு நிறமாக இருக்கும்.


இந்த நாளில் சந்திரன் சூரியனுடன் நேர்கோட்டில் அமைகிறது. இதனால் அதன் பிரகாசமான பக்கம் இருள்கிறது. இருப்பினும், சூரிய கிரகணத்தின் போது, ​​சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கருத்துவிடும். சூரிய கிரகணம் ஆண்டுக்கு 2 முதல்  5 முறை வரை நிகழும்.


நிலவு நாட்காட்டியைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை, ஒரு பெளர்ணமி ஏற்படும். ஒரே மாதத்தில் இரண்டு பெளர்ணமிகள் ஏற்பட்டால் அதனை ப்ளூ மூன் என்பார்கள்.