தமிழ்நாடுஅரசின் உத்தரவின்படி 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜீவ் குமார் உள்ளிட்ட 4 பேருக்கு புதியதாக டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.


டிஜிபி ஆக பதவி உயர்வு:



  • டெல்லியில் இந்தோ திபெத் எல்லை படையின் ஏடிஜிபி ஆக உள்ள ராஜீவ் குமாருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

  • ஆவடி மாநகர ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் போலிஸ் பயிற்சி அகாடெமியின் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

  • ஊழல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபி ஆக இருந்த அபய் குமார் சிங்கிற்கு, ஊழல் தடுப்பு பிரிவின் டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

  • TANGEDCO அமைப்பின் ஏடிஜிபி ஆக இருந்த வன்னிய பெருமாள், அந்த அமைப்பின் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.


பணியிட மாற்றம்:



  • சிவில் சப்ளையஸ் அமைப்பின் ஏடிஜிபி ஆக இருந்த அருண், ஆவடி மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

  • சென்னை மாநகர துணை ஆணையராக இருந்த ஆல்பர்ட் ஜான், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • மாநில குற்ற ஆவண கண்காணிப்பாளராக இருந்த ஷ்ரேயா குப்தா, சென்னையில் உள்ள பூக்கடை பகுதியின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • கிழக்கு திருநெல்வேலியின் துணை காவல் ஆணையராக இருந்த ஸ்ரீனிவாசன் சென்னை மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ஹர்ஷ் சிங், நாகப்பட்டினம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • நாகப்பட்டினம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜவஹர், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சசி மோகன், க்யூ பிரான்ச் சிஐடி அமைப்பின் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

  • கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன், வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ராஜேஷ் கண்ணன், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கலைச்செல்வன், மாநில குற்ற ஆவண கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

  • செங்குன்றத்தில் துணை காவல் கணிகாணிப்பாளராக இருந்த மணிவண்ணன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

  • மதுரை தெற்கு சட்ட & ஒழுங்கு துணை ஆணையராக இருந்த சாய் பிரணீத், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

  • கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த பிரதீப்,  மதுரை தெற்கு சட்ட & ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • திருச்சி தெற்கு பகுதியின் துணை கமிஷனராக இருந்த ஸ்ரீதேவி, சிபிசிஐடியின் சைபர் செல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • தமிழ்நாடு கமாண்டோ ஃபோர்ஸின் கண்காணிப்பாளராக இருந்த  செல்வகுமார், திருச்சி தெற்கு பகுதியின் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த பல்லா கிருஷ்ணன், செங்குன்றம் பகுதியின் துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • திட்டமிட்டு செய்யப்படும் குற்றச்செயல்கள் தொடர்பான உளவுத்துறையின் கண்காணிப்பாளராக ராஜேந்திரன், சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி-II-வின் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

  • சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி-II-வின் கண்காணிப்பாளராக இருந்த சாமிநாதன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சஷங்க் சாய், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • சிபிசிஐடியின் சைபர் செல் பிரிவின் கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபாலன், தமிழ்நாடு கமாண்டோ போர்ஸின் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.

  • சிஐடி சிறப்பு பிரிவின் கண்காணிப்பாளராக இருந்த சரவணன், திட்டமிட்டு செய்யப்படும் குற்றச்செயல்கள் தொடர்பான உளவுத்துறையின் கண்காணிப்பாளரின் முழு பொறுப்பையும் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • காவல்துறையின் மாநில மாஸ்டர் கண்ட்ரோல் அறையின் கண்காணிப்பாளராக இருந்த தீபா சத்யன், தமிழ்நாடு போலிஸ் அகாடெமியின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த பாண்டியராஜன், மத்திய உளவுத்துறை பிரிவின் கண்காணிப்பாளராக மற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • மத்திய உளவுத்துறை பிரிவின் கண்காணிப்பாளராக இருந்த ஜெயந்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • சிஐடியில் சிறப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சரவண குமார், கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை தெற்கு ஊழல் தடுப்பு பிரிவின் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • கடலூரில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான கூடுதல் கண்காணிப்பாளரான பொன் கார்த்திக் குமார், சென்னை வடக்கு பிரிவின் பொருளாதார குற்றங்கள் பிரிவின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

  • காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த வினோத் சாந்தராம், சென்னையில் சிபிசிஐடி பிரிவில் சிறப்பு பிரிவின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

  • கரூர் மாவட்டத்தில் சைபர் க்ரைம் பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த கீதாஞ்சலிக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, சென்னை பெருநகர சைபர் க்ரைம் பிரிவின் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • கள்ளக்குறிச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த விஜேய கார்த்திக் ராஜ், மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

  • தாம்பரத்தில் போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த காமினி, சென்னையில் சிவில் சப்ளையஸ் பிரிவின் ஐஜிபி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • ஆயுதப்படையின் ஐஜிபி -ஆக இருந்த ராதிகா, அமலாக்கப்பிரிவின் ஐஜிபி-ஆக மாற்றப்பட்டுள்ளார்.

  • பெருநகர சென்னையில் சட்ட - ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த  அன்பு, சிஐடி குற்றப்பிரிவின் ஐஜிபி-ஆக பொறுப்பேற்க உள்ளார்.

  • சென்னை தலைமை அலுவகலத்தில் கூடுதல் ஆணையராக இருந்த லோகநாதன், பெருநகர சென்னையில் சட்ட - ஒழுங்கு கூடுதல் ஆணையர் பொறுப்பை வகிப்பார்.

  • ஆவடிதலைமை அலுவலகத்தில் கூடுதல் ஆணையராக இருந்த நஜ்முல் ஹூடா, நல்வாழ்வு பிரிவு ஐஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • அமலாக்கப்பிரிவின் ஐஜிபி ஆக இருந்த ரூபேஷ் குமார் மீனா, சமூக நலன் மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.