Amazon Layoffs : அமேசான் நிறுவனம் இந்தியாவில் சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. 


குறிப்பாக ஊழியர்களுக்கு திடீரென ஒரு மெயில் அனுப்பி பல நிறுவனங்கள் அவர்களை வேலையில் இருந்து தூக்கியது. மேலும் எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில், தொழில்நுட்ப உலகில்  முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் பல்வேறு இடங்களில் பணிநீக்கங்களை செய்து வருகிறது. அந்தவகையில், தற்போது மேலும் 500 பேரை பணிநீக்கம் செய்துள்ளது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


500 பேர் பணிநீக்கம்


அதன்படி, தற்போது இந்தியாவில் ஊழியர்கள் 500 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பணிநீக்கங்கள் Amazon Web Service(AWS), Twitch, Advertising, Hr உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாளர்கள் குறைத்துள்ளது.  கொச்சி மற்றும் லக்னோ போன்ற 2 நகரங்களில் விற்பனையாளர் ஆன்போர்டிங் செயல்பாடுகளையும், அதன் விற்பனையாளர் செயல்பாடு ஆகியவற்றை மூடியுள்ளது அமேசான். 


மார்ச் மாதத்தில் அமேசான் தனது இரண்டாவது சுற்று பணிநீக்கங்களை அறிவித்தது. இதில் 9,000 பணியாளர்களை குறைத்துள்ளது.  Amazon Web Service(AWS), Twitch, Advertising, Hr ஆகிய துறைகளில் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஒரு பகுதியாக இந்த துறையில் தற்போது இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள் 500 பேரை பணிநீக்கம் செய்துள்ளது அமேசான்.


காரணம்


இது குறித்து அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்டி ஜெஸ்லி கூறுகையில், ”இது நிறுவனத்தின் நீண்ட கால நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவும் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்திலும்  தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ஜனவரி மாதத்தில் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சுமார் 9 ஆயிரம் பேர் நீக்கப்பட்டனர். இதுபோன்று பணிநீக்கங்கள் செய்யப்படுவது அமேசானில் முதல் முறையாகும். நிச்சயமற்ற பொருளாதாரம் மற்றும் விரைவான பணியமர்த்தல் ஆகிய காரணங்களால், செலவினங்களை குறைக்கும் நோக்கில் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக" அமேசான் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், தனது ஊழியர்களுக்கு கடிதம் மூலம் பணிநீக்க அறிவிப்பை அனுப்பி வைத்தார்  அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜெஸ்லி.




மேலும் படிக்க


PM Modi: ரோஜ்கார் மேளா திட்டம்.. மீண்டும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி..!