ஆஸ்திரேலிய முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான எலினா டோகிக், சில மாதங்கள் முன்பு தான் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலமை வந்ததாக தெரிவித்தார். 2002 ஆம் ஆண்டில் உலகத் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு உயர்ந்த 39 வயதான அவர், இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்ட, இதயப்பூர்வமான செய்தியை கண்ணீருடன் பதிவிட்டிருந்தார். 1999 ஆம் ஆண்டு விம்பிள்டனில் உலக நம்பர் ஒன் வீராங்கனையான மார்டினா ஹிங்கிஸ்ஸை முதல் சுற்றில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய டோக்கிக், தான் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறினார்.



இன்ஸ்டாகிராம் பதிவு


இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட எலினா, "26வது மாடியின் பால்கனியில் இருந்து குதித்து என் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தேன். அந்த நாளை மறக்க முடியாது. எல்லாம் மங்கலாக இருக்கிறது. எல்லாம் இருட்டாக இருக்கிறது. எதிலும் தெளிவு இல்லை, எதுவும் புரியவில்லை... கண்ணீர், சோகம், மனச்சோர்வு, பதட்டம் வலி மட்டுமே இருந்தது. கடந்த ஆறு மாதங்கள் கடினமாக இருந்தன. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். அந்த நாளை ஒருபோதும் மறக்க முடியாது, வலியும் துன்பமும் இதோடு தீரட்டுமே என்றுதான் அந்த முடிவுக்கு போனேன்," என்று அவர் எழுதி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


பிரச்சனைகள் சூழ் வாழ்க்கை


டோக்கிக் தனது வாழ்க்கையில் ஆறு டபிள்யூடிஏ ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். 2000 இல் விம்பிள்டனின் அரையிறுதிப் போட்டி வரை வந்தார். ஆனால் அவருடைய தந்தையின் பிடியில் இருந்து வெளியில் வருவதற்காக மிகவும் கஷ்டப்பட்டார். அந்த நேரத்தில் சட்டமுறைப்படி தந்தையை பிரிந்து வருவதற்கான முயற்சியில் இருக்கையில் டென்னில் தரவரிசையில் 600வைது இடத்திற்கு தள்ளப்பட்டார். விம்பிள்டனில் உள்ள ஆல் இங்கிலாந்து கிளப்பில் டாமிர் தடைசெய்யப்பட்டது தொடங்கி, அவரது மகள் என்று கூறி கடத்தப்பட்டது வரை பல பிரச்சனைகள் அவரை சூழ்ந்து கொண்டன.






மன அழுத்தம்


டென்னிஸ்-இல் இருந்து ஓய்வு பெற்றதிலிருந்து தொலைக்காட்சி வர்ணனையாளராகப் பணிபுரிந்த டோகிக், இப்போது மன அழுத்தத்தால் போராடுபவர்களுக்கு ஊக்குவித்து உதவி வருகிறார். "நான் இதை ஏன் எழுதுகிறேன் என்றால், நான் மட்டும் மன அழுத்தத்தால் போராடவில்லை, நிறைய பேருக்கு இது ஊக்குவிப்பாக இருக்கும். நீங்கள் தனியாக இல்லை என்பதை உணருங்கள். நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லப் போவதில்லை. முன்பைவிட இப்போது சிறப்பாக செயல்படுகிறேன். ஆனால் நான் மீட்சிக்கான பாதையில் இருக்கிறேன். இப்போது இன்னும் திடமாக திரும்பி வந்துள்ளேன்." என்று இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.