போர்ச்சுகலில் டிஸ்டில்லரி ஒன்றில் இருக்கும் இரண்டு டேங்குகள் எதிர்பாராத விதமாக உடைந்து விபத்துக்குள்ளானது. இதனால் 22 லட்சம் லிட்டர் ரெட் ஒயின் வெளியேறி அருகில் இருக்கும் தெருக்களில் ஆறு போல் பாய்ந்தோடியது.
இந்த சம்பவம் போர்ச்சுகலில் இருக்கும் சாவோ லோரென்கோ டி பைரோ என்ற நகரில் நிகழ்ந்துள்ளது. ரெட் ஒயின் தெருக்களில் ஆறுபோல் பாய்ந்தோடும் காட்சியை பலரும் வியப்பூட்டும் வகையில் பார்த்துச் சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் பகிரப்பட்ட வீடியோவில் ரெட் ஒயின் சாவோ லோரென்கோ டி பைரோ நகரில் இருக்கும் தெருவில் பாய்ந்தோடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஏராளமான நபர்கள் இதனை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
இந்த விபத்தில் 6 லட்சம் கேலன் ரெட் ஒயின் அதாவது சுமார் 22 லட்சத்து 71 ஆயிரம் லிட்டர் ரெட் ஒயின் டிஸ்டில்லரியிலிருந்து கசிந்து ஓடியது. இந்த கசிவு நினைந்து பார்க்க முடியாத அளவு மிகவும் பெரியதாக இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒலிம்பிக்கில் இருக்கும் நீச்சல் குளத்தை கூட நிரப்பும் அளவு இருக்கும் என அங்கிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமோ என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த ரெட் ஒயின் அருகில் இருக்கும் செர்டிமா நதியில் சென்று கலப்பதற்கு முன் அதனை தடுப்பு போட்டு வேறு திசைக்கு மாற்றி அமைத்தனர். அனடியா தீயணைப்புத் துறையினர் விரைந்து நடவடிக்கையில் இறங்கி தெருக்கலில் ஓடும் ரெட் ஒயின் ஆற்றை, திசை திருப்பு அருகில் இருக்கும் வயலில் மாற்றிவிட்டனர்.
ஆலையில் ஏற்பட்ட விபத்தால் கசிந்த ரெட் ஒயின் அப்பகுதி குடியிருப்பில் இருக்கும் அடித்தளத்தை சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் இந்த விபத்திற்கு முழு பொறுப்பையும் அந்த ஆலையே ஏற்கும் என அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PowerPoint: 90ஸ் கிட்ஸ் வியந்து பார்த்த பவர்பாயிண்ட்டை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் உயிரிழப்பு