நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 300 கிமீ சுற்றளவில் அருகிலுள்ள, மக்கள் வசிக்காத தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் டெக்டோனிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய டெக்டோனிக் தட்டு ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம். இது ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

PM Modi: பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? பரிசுக்குழு துணைதலைவர் புகழாரம்
PM Narendra Modi: இந்திய பொருளாதாரத்தின் சக்தியே உட்கட்டமைப்பு வளர்ச்சிதான் - பிரதமர் மோடி உரை