கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள இந்துக் கோயில் மீது ஆண்டி இந்தியன் கிராஃபிட்டிகளால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற சம்பவம் கடந்த  ஜனவரி 31 ஆம் தேதி கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ஒரு இந்து கோயிலில் ஆண்டி இந்தியன் கிராஃபிட்டியால் சேதப்படுத்தப்பட்டது.

கனடாவில் தொடர்ந்து இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது இரு நாட்டினர் இடையே எதிர்ப்பை தூண்டியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக இந்து கோயில் மீது ஆண்டி இந்தியன் கிராஃபிட்டியால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை ஒன்டாரியோவில் உள்ள இந்துக் கோயில் மீது இரண்டு நபர்கள் ஆண்டி இந்தியன் கிராஃபிட்டி மூலம் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வின்ட்சர் காவல்துறை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த சம்பவத்தில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இரவு 1 மணியளவில் கோயிலுக்கு வருகை தந்து, ஒருவர் கண்காணித்து வர மற்றொருவர் கோயில் சுவர் மீது ஆண்டி இந்தியன் கிரஃபிட்டி வரைந்ததாகவும் கூறப்படுகிறது. மோடியை தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என அந்த கிரஃபிட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அப்பகுதி மக்களிடம் தங்கள் வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமிராவில் காட்சிகள் பதிவாகியுள்ளதா? என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் கனடாவின் மிசிசாகாவில் உள்ள ராம் மந்திர் ஆண்டி - இந்தியன் கிராஃபிட்டியால் சேதப்படுத்திய சம்பவம் இரு நாட்டு மக்களிடையே எதிர்ப்பை தூண்டியுள்ளது. தொடர்ந்து  இது போன்ற  வெறுப்பு வாத சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அங்கு வாழும் இந்திய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.  

Pakistan Economic Crisis: பாகிஸ்தானில் கடும் பஞ்சம்... வரலாறு காணாத அளவுக்கு வட்டி அதிகரிப்பு... திணறும் மக்கள்...!

உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: மஸ்க், முகேஷ் அம்பானிக்கு எந்த இடம்?

NASA Asteroid: பூமியை நெருங்கும் 150 அடி விண்கல்.. பேராபத்து ஏற்படுமா? நாசா கொடுத்த விளக்கம்..