உலகின் முன்னணி வணிக பத்திரிக்கையான போர்ப்ஸ் 2023 ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள் யார் என்பதை அறிவோம். அதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் டாப் 10ல் இந்தியாவின் முகேஷ் அம்பானி 9வது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் ஏற்கெனவே அதானி 3வது இடம் வரை முன்னேறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


1.பெர்னார்ட் அர்னால்ட்:


2023 ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். பிரபல LVMH (LVMH Moët Hennessy Louis Vuitton) லூயி வுய்ட்டன் என்ற பிரபல பேஷன் நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 211 பில்லியன் டாலர் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெர்னார்ட் அர்னால்ட் 1949ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ரூபைக்ஸ் பகுதியில் பிறந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள Ecole பொறியியல் கல்லூரியில் படிப்பை முடித்தார். தனது குடும்பத்துக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலேயே முதல் பணியை தொடங்கினார். படிப்படியாக வளர்ந்து ஃபேஷன் உலகின் அடையாளமாக உள்ளார். உலகின் பணக்கார முகங்களை பொறுத்தவரை பெர்னார்ட் அர்னால்ட் வெகுமக்களுக்கு பரிச்சயமானவர் அல்ல. ஆனாலும், அவர் வசம் இருக்கும் நிறுவனங்களும், ஆடம்பர பிராண்டுகளும் உலகம் முழுவதும் மக்களிடம் பிரசித்தி பெற்றவை.


2. எலான் மஸ்க்:


180 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் எலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அந்நிறுவனத்தில் அதிரடிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் எனப் பல்வேறு நிறுவனங்களுக்கு இவர் சொந்தக்காரர்.


3.ஜெஃப் பெஸோஸ்:


உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் சிஇஓ தான் இந்த ஜெஃப் பெசோஸ். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவருடைய சொத்து மதிப்பு 114 பில்லியன் டாலர். 


4. லாரி எலிஸன்:


லாரன்ஸ் ஜோசப் எலிசன் ஓர் அமெரிக்க வணிக அதிபர், முதலீட்டாளர் மற்றும் வள்ளல் ஆவார். இவர் ஆரக்கிள் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர், நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆவார். 78 வயதான லாரியின் சொத்து 107 பில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


5. வாரன் பஃப்ஃபட்


92 வயதான பெர்க்ஷைர் ஹாத்தவே குழுமத்தின் தலைவர் வாரன் பஃப்பட். உலகின் மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர் என்ற பெருமைக்குரியவர். இவரது சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலர் என்று தெரியவந்துள்ளது.


6. பில் கேட்ஸ்


67 வயதான அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 104 பில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவரும் இவரது முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸும் இணைந்து கேட்ஸ் ஃப்வுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்துகின்றனர்.


7. மைக்கேல் ப்ளூம்பெர்க்


81 வயது அமெரிக்கரான மைக்கேல் ப்ளூம்பெர்க் 94.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 7வது பணக்காரராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு 1.7 பில்லியன் டாலரை தர்ம காரியங்களுக்காக கொடுத்தார். 


8. கார்லஸ் ஸ்லிம் ஹெலோ மற்றும் குடும்பம்


83 வயதான மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லஸ் ஸ்லிம்மின் சொத்து மதிப்பு 93 மில்லியன் டாலர். இவர் தொலைதொடர்பு ஜாம்பவான். இவர் அமெரிக்கா மொவில் என்ற தொலைபேசி நிறுவனத்தை நடத்துகிறார்.


9. முகேஷ் அம்பானி


65 வயதான இந்தியாவின் முகேஷ் அம்பானி உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 9வடு இடத்தில் உள்ளர். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர். இவருடைய சொத்து மதிப்பு 83.4 பில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


10. ஸ்டீவ் பால்மர்


67 வயதான ஸ்டீவ் பால்மர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ. இவருடைய Ballmer’s L.A. அணி NBA கூடைப்பந்து தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளது. இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய சொத்து மதிப்பு 80.5 பில்லியன் டாலர்.