திபெத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள நியிஞ்சி (Nyingchi) நகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் காணாமல் போன நபர்களை தேடும் பணிகளை மேற்கொள்ள சீனா பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்பியுள்ளது. 


நியஞ்சியை மெடாக் (Medog)  மற்றும் பாய் (Pai) கிராமத்தை இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. 


நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 


இந்தப் பனிச்சரிவு பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியிடவில்லை. 


பனிச்சரிவு நடைபெற்ற இடத்திற்கு 131 மீட்பு படையினரும், 28 அவசரகால வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பனிச்சரிவில் சிக்கியோர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


சீனா, பேரிடர் மீட்பு துறையில் இருந்து 246 வீரர்கள், 70 வாகனங்கள், 994 சர்ச் டிவைசஸ், ஆகியவை தீபெத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


திபெத்தின் சுவிட்சர்லாந்து என்றழைப்படும் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை.




மேலும் வாசிக்க.


7AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் உங்களைச் சுற்றி நடந்தது இதுதான்..! காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!


பருவமெய்தியதை மறைத்து டாக்டராக விரும்பும் சிறுமி... ஓடிடியில் வெளியாகும் 2023-ன் முதல் தமிழ் ஒரிஜினல் சீரிஸ் ’அயலி’!