America Shooting : ஹோட்டலுக்குள் நுழைந்த மர்மநபர்... துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 4 பேர் உயிரிழப்பு... 25 பேர் படுகாயம்..!

அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் மர்ம நபர் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Continues below advertisement

America Shooting : அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் மர்ம நபர் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Continues below advertisement

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் அமெரிக்காவில் 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது.  இந்தத் துப்பாக்கி சுடுதல் சம்பவத்தில் சிலர் உயிரிழந்தும் வருகின்றனர். அந்த வகையில் தற்போது மெரிலேண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில்
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கேளிக்கை விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்

அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம் பால்டிமோர் நகர் கிரெட்னா அவன்யூ பகுதியில் கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சம்பவத்தன்று சுமார் 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் கேளிக்கை விடுதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.

இதனை அடுத்து,  அவர் துப்பாக்கியை காட்டி அங்கு உள்ள மக்களை மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன மக்கள் விடுதியில் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். பிறகு அந்த மர்மநபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளினார். இதனால் கேளிக்கை விடுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அங்கிருந்த சிலர் ஒளிந்துக் கொண்டனர். அப்போது, அந்த நபர், கண்களில் தென்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

4 பேர் உயிரிழப்பு

உடனே  இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, அந்த மர்மநபர்  போலீசார் பிடிக்க முயன்றபோது அவர் இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாக தெரிகிறது. கேளிக்கை  விடுதியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சுட்டில் 25 பேர் படுகாயமடைந்ததாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துப்பாக்கிச் சுட்டில் படுகாயமடைந்த 25 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் அமெரிக்காவில் 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட டென்னிசி, நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ பள்ளியில் நேற்று ஒரு பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.


மேலும் படிக்க 

Apple 3 Trillion: 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்.. ஆப்பிள் நிறுவனத்தில் கொட்டும் பணம்.. வரலாற்றிலேயே முதன்முறை..!

France Riots: மீண்டும் ஒரு ஜார்ஜ் ப்ளாய்ட் சம்பவம்.. யார் இந்த நஹெல்? பிரான்ஸை உலுக்கும் ஆப்பிரிக்க சிறுவனின் மரணம்..!

Continues below advertisement
Sponsored Links by Taboola