மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்குசக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் நடந்தே பணிக்கு டிஎஸ்பி சென்று வரும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

மதுவிலக்கு பிரிவில் சிறப்பான பணி

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் சட்டவிரோத சாராயம் மற்றும் மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்துள்ளதுடன், சட்டவிரோத சாராயம் மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200 -க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களில் 700 பேரை சிறையில் அடைத்துள்ளார். தொடர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

Continues below advertisement

வாகனம் பறிப்பு?

இவ்வாறு, மயிலாடுதுறை மாவட்டத்தில் மது கடத்தல்காரர்களுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழும் டிஎஸ்பி சுந்தரேசனின் நான்குசக்கர வாகனம் மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டுள்ளதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக முதலமைச்சர் வருகைக்கு முன்னர் மாவட்டத்தில் முன்னோர்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்வதற்கு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் எஸ்.பி இன்ஸ்பெக்டர் கேட்டு கொடுக்க மறுத்ததால், அவரை பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தாகவும், மீண்டும் பணிக்கு வந்தவுடன் வாகனத்தை அனுப்பாமல் பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

நடந்து பணிக்கு சென்ற டிஎஸ்பி 

இதனால் டி.எஸ்.பி சுந்தரேசன் சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிகளுக்கு சென்று வந்ததாகவும், அந்த வீடியோ காவல்துறை குரூப்பில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டி.எஸ்.பி சுந்தரேசன் இன்று தனது வீட்டில் இருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு பணிக்கு நடந்து சென்றது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது, சாராயம் உள்ளிட்ட போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நேர்மையான டிஎஸ்பியை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பந்தோபஸ்து டியூட்டி என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்லுமாறு தூக்கி அடிப்பதும், பணிக்குத் திரும்பிய டிஎஸ்பிக்கு வாகனத்தை வழங்காமல் நடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளதாக கூறி காவல்துறையின் மீது பொதுமக்களிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

மாநில மனித உரிமை கமிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் காஞ்சிபுரம் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலைவழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்டர்களில் விசாரணை அதிகாரியான சுந்தரேசன் காவல்துறையினரின் தவறுகளை தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாற்று வாகனம்

மேலும் முதலமைச்சர் வருகைக்கு முன்னர் அமைச்சர் எஸ்கார்டு செல்வதற்கு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் எஸ்பி இன்ஸ்பெக்டர் கேட்டதாகவும் அதற்கு சட்டத்தின் இடம் இல்லை என கூறி டிஎஸ்பி கொடுக்க மறுத்தாகவும், இதனால் அவரது நல்ல நிலையில் இருந்த வாகனத்தை பிடுங்கி கொண்டு அவருக்கு வேறு ஒரு பழைய பழுதான வாகனத்தை வழங்கியதாகவும், ஆனால் அதனை அவர் வேண்டாம் என கூறிவிட்டு, இருசக்கர வாகனத்தில் பணியை செய்து வந்தாகவும், இன்று அவர் இருசக்கர வாகனத்தையும் பயன்படுத்தாமல் நடந்து வந்த நிலையில் அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் மாவட்டத்தில் பொறுப்பேற்ற நாள் முதல் மாவட்ட காவல்துறை அதிகாரி தொடர்ந்து இவருக்கு பல்வேறு பின்னல்களை கொடுத்து வருவதாகவும் ஒரு புகார் இருந்து வருகிறது. இதன் காரணமாக நேர்மையாக பணியாற்றும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் டிஎஸ்பி சுந்தரேசன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

காவல்துறை மறுப்பு  

மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டமாகும். துணைக்காவல் இம்மாவட்டத்தில் தற்போது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் கண்காணிப்பாளராக சுந்தரேசன் பணியாற்றி வருகிறார். கடந்த 07.04.2025 முதல் TN 51 G 0817 பதிவெண் கொண்ட Bolero வாகனம் அலுவலக பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முக்கிய அலுவலுக்காக கடந்த 11.07.2025-ந் தேதி அவர் பயன்படுத்தி வந்த TN 51 G0817 பதிவெண் கொண்ட Bolero வாகனம் எடுக்கப்பட்டு, மாற்று வாகனமாக TN 51 G 0616 பதிவெண் கொண்ட Bolero வாகனம் வழங்கப்பட்டது. பின்னர் இன்று 17.07.2025-ந் தேதி மீண்டும் ஏற்கனவே பயன்படுத்தி வந்த TN 51 G 0817 பதிவெண் கொண்ட Bolero வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணைக்காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் என்பவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வருவது போன்றும், மேற்கண்ட துணைக்காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வாகனம் வழங்கப்படவில்லை என்றும் உண்மைக்கு புறம்பான செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இவ்விதமான தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உரிய அதிகாரிகளிடம் அது தொடர்பான தகவல்களை கேட்ட பின்பு சரியான தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு 

இந்நிலையில் இது குறித்து டிஎஸ்பி சுந்தரேசன் கூறுகையில், கடந்த ஐந்தாம் தேதி மினிஸ்டர் மெய்யநாதனின் பாதுகாப்பு பணிக்காக தன்னுடைய வாகனத்தை மாவட்ட காவல்துறை கேட்டனர். அது புரோட்டா காலில் கிடையாது என்பதால் என்னுடைய வாகனத்தை தர மறுத்து விட்டேன். அது சம்பந்தமாக எஸ்பி இன்ஸ்பெக்டர் தன்னிடம் பேசினார். அப்போது எந்த ஒரு ஆர்டரும் இன்று என்னால் வாகனத்தை தர முடியாது. எந்த ஒரு ஆர்டர் மின்றி என்னால் வாகனத்தை தர இயலாது. வாகனம் வேண்டுமென்றால் முறையான உத்தரவு போட வேண்டும். ஆனால் வாகனத்தை கொடுக்கவில்லை என்பதற்காக, உடனடியாக என்னை மைக்கில் கூப்பிட்டு திருச்செந்தூருக்கு வேறு ஒரு டிஎஸ்பி பாதுகாப்பு பணிக்கு செல்ல இருந்த நிலையில் அவரை மாற்றி விட்டு என்னை வந்த பாதுகாப்பு பணிக்காக செல்ல உத்தரவு விட்டனர். 

ஏழாம் தேதி அங்கு பாதுகாப்பு பணியை முடித்த நிலையில், மீண்டும் என்னை எஸ்பி அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு திருவாரூருக்கு பாதுகாப்பு பணிக்கு செல்ல அறிவுறுத்தினர். அங்கும் சென்று பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு மூன்று தினங்களுக்கு பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு திரும்பி விட்டேன். மீண்டும் அமைச்சர் மெய்யநாதனுக்கு வாகனம் வேண்டும் என எனது வாகனத்தை கேட்டனர். அப்போது எனது வாகனம் ஏற்கனவே இருமுறை கான்வாயில் பழுதானகியுள்ளது. இருந்தபோதிலும் நீங்கள் கேட்பதால் எனது வாகனத்தை தருகிறேன் ஆனால் இந்த வண்டி பிரச்சினைக்குரிய வண்டி எனக் கூறி வாகனத்தை தந்தேன். 

சத்தியமாக நான் நேர்மையான அதிகாரி 

பத்தாம் தேதி வாகனத்தை கொடுத்த நிலையில் இன்றுவரை மீண்டும் தனக்கு வாகனத்தை திருப்பி அளிக்கவில்லை. நான் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்தேன். என்னிடம் சொந்த இருசக்கர வாகனம் கூட இல்லாததால் சக காவலர்கள் வாகனத்தை தான் பயன்படுத்தினேன். தொடர்ந்து இரவல் வாகனத்தை பயன்படுத்த முடியாது என்பதால், கடந்த இரண்டு நாட்களாக எனது அலுவலகத்திற்கு நடந்து வந்தேன். அதனை ஊடகங்களில் படம் பிடித்து போட்டுள்ளனர். நான் மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக 1200 வழக்குகள் பதிவு செய்து 700 பேர்களை சிறையில் அடைத்துள்ளேன், ஐந்து பேரை குண்டாஸில் அடைத்துள்ளேன். இது காரைக்கால் பார்டர் என்பதால் அங்கிருந்து வெளி மாநில மறுப்பாளர்கள் கடத்தப்படுவதை முழுவதுமாக கண்ட்ரோல் செய்துள்ளேன். இதனால் அதிகாரிகளுக்கு வரும் சாரய மாமுல் நின்று போனது. என்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குறிப்பிட்டு வேலை நீட்டி அதனை வளைத்துக் காட்டி இதுபோல் சற்று வளைந்து போங்க, இல்லையென்றால் விரலை உடைத்து விடுவார்கள் என எஸ்பி மிரட்டுகிறார். இது ஒரு அதிகாரி பேசும் போச்சா? இது போன்ற அதிகாரியிடம் எவ்வாறு வேலை பார்ப்பது? நான் நேர்மையா இருந்த ஒரே காரணத்திற்காக இவ்வளவு சிக்கல்களை சந்தித்து வருகிறேன். நான் ஏசி லஞ்சம் பெற்றதாக பேசப்படுகிறது.

பாத்ரூம் கூட இல்லாத எனது அறையில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்ததால் தான் கஷ்டப்படுவதை அறிந்து, எஸ் ஐ ஒருவர் அவர் வீட்டில் இருந்த பழைய ஏசியினை இங்கு அமைத்துக் கொடுத்தார். தன்னை எப்படி எல்லாம் காரணம் செய்ய வேண்டுமோ அவ்வாறு செய்கின்றனர். நான் யாரிடமும் பணம் வாங்காமல் நேர்மையாக பணி செய்து வருகிறேன். நேற்று எஸ்.பி. என்னை கூப்பிட்டு எனக்கும் உங்களுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது, ஐஜி இன்டெலிஜென்ட் செந்தில்குமார் மற்றும் ஏடிஜி லாண்டாடர் இவரும் தான் உங்களை டார்ச்சர் செய்ய சொல்கிறார்கள் இது எவ்விதத்தில் நியாயம்? மனித உரிமை ஆணையத்தில் பணிபுரிந்த போது அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மீது புகார் அளித்தற்காக தன்னை இவ்வளவு டார்ச்சர் செய்து வருகின்றனர். சத்தியமாக நான் நேர்மையான அதிகாரி என தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளார்.