தென்மேற்கு அமெரிக்காவில் வெப்பநிலை மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது.  வரும் நாட்களில் வெப்பம் மேலும்  அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இப்படி அப்பகுதி மக்களை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 2 லிட்டர் தண்ணீரை குடித்ததை அடுத்து  திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் இந்தியானாவை  சேர்ந்த ஆஷ்லே சம்மர்ஸ் என்றும் அவர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இது குறித்து, உயிரிழந்த பெண்ணின் சகோதரர் டெவன் மில்லர் பேசும்போது ”வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் 20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீரை குடித்து முடித்துள்ளார். அடுத்த சற்று நேரத்திலேயே அவர் திடீரென மயங்கி விழுந்தார். ஆஷ்லேவிற்கு ந்நீண்ட நேரமாக சுயநினைவு திரும்பவில்லை. அதன் பின் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவர் உயிரிழந்தார்” என தெரிவித்துள்ளார்.


இது குறித்து டாக்டர் பிளேக் ப்ரோபெர்க் கூறியதாவது: ”கோடைக்காலத்தில் இது போன்ற சம்பவம் நிகழ காரணம்,  வெயில் காரணமாக திடீரென அதிகமான நீரை எடுத்துக் கொள்வார்கள். உடலில் அதிக தண்ணீர் சத்து இருந்தும், போதுமான சோடியம் இல்லாமல் போனால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படலாம். குறுகிய காலத்தில் அதிக தண்ணீர் உட்கொள்ளும் போது அல்லது அடிப்படை சுகாதார நிலைமைகள் காரணமாக சிறுநீரகங்கள் அதிகப்படியான தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும் போது இப்படி நிகழ்கிறது” என்றார். 


வாஷிங்டன், அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில்  வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால்  வெப்பத்திலிருந்து தற்கத்துக்கொள்ள குளிர்பானங்கள், ஈரமானத் துண்டு ஆகியவற்றை பயன்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளதால், வீடுகள் இல்லாத மக்களே பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து கொள்கிறார்கள். சிலர் குளிர்ந்த நீரை அடிக்கடி குடித்து உடலில் நீர்சத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர். இங்குள்ளவர்கள் வெப்பம் அதிகமாக இருப்பதால்  மாலை நேரத்தில் வெயில் குறைந்த பிறகு விளையாடுகின்றனர்.


மேலும் படிக்க,


IND vs WI 2nd T20: இன்னும் சற்று நேரத்தில் 2வது டி20.. மீண்டும் சம்பவம் செய்யுமா வெ.இண்டீஸ்..? பதிலடி தருமா இந்தியா?


Pakistan Train Accident: அச்சச்சோ..! ரயில் கவிழ்ந்து கோர விபத்து, பாகிஸ்தானில் 22 பேர் பலி, 80 பேர் காயம்..