விழுப்புரம்: விழுப்புரத்தில் பெய்த கனமழையின் காரணமாக கீழ்பெரும்பாக்கம் ரயில்வே தரைப்பாலம் நிரம்பியதால் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றனர். 


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை அல்லது லேசான மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் விழுப்புரம் கோலியனூர், பிடாகம் முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை இரவு கொட்டி தீர்த்தது. கனமழையின் காரணமாக விழிப்புரம் நகரபகுதியான கீழ்பெரும்பாக்கத்திலிருந்து விழுப்புரம் நகரத்தின் பிரதான சாலையை இணைக்கும் ரயில்வே தரைப்பாலம் மழையின் காரணமாக முழ்கியது.


தரைப்பாலம் மூழ்கியதால் அதிகாலையில் கீழ்பெரும்பாக்கத்திலிருந்து நகர பகுதியான காமராஜர் வீதி திருவீக வீதி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து செல்லுபவர்கள் இவ்வழியை கடக்க முடியாமல் மாதா கோவில் வழியாக இரண்டு கிலோ மீட்டர் சுற்றிகொண்டு சென்றனர். மேலும் தரைப்பாலத்தை கடக்க முடியாததால் பள்ளி மாணவர்கள் முதியவர்கள் ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து சென்றனர். சில பள்ளி மாணவர்கள் ரயில்வே தரைப்பாலத்தினை கடக்க முடியாததால் ரயில்வே தண்டவாளத்தின் வழியாக கடக்கும் போது மிதிவண்டிகளை தூக்கி கொண்டு தண்டவாளங்களை கடந்து சென்றனர். விழுப்புரத்தில் எப்போதும் பெய்யும் மழையின் போதும் தரைப்பாலம் நிரம்புவதால் நகராட்சி நிர்வாகம் நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் மூலம் விரைந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


 


விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Toll Plaza : நாளை முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்கிறது... விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் எவ்வளவு தெரியுமா ?


இளைஞர் வயிற்றில் இருந்து ஹேர்பின், பிளேடு, ஊக்குகள் அகற்றம் - புதுச்சேரி மருத்துவர்கள் சாதனை


Differently Abled Scholarship: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு


கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்


புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.