புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை கடும் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அந்த வாலிபரின் வயிற்றில் பிளேடு, ஹேர் பின், ஊக்குகள் குவியலாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த வாலிபரின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி கருவி மூலம் 13 ஹேர்பின், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை அகற்றினர்.
மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சசிக்குமார் கூறுகையில்:-
வாலிபரின் வயிற்றில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றிய பின்னர் அந்த வாலிபர் வழக்கமான உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார். அதனால் மறுநாளே அவர் உடல் நலத்துடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த செயல்முறை சவாலாக இருந்தது. குறிப்பாக வயிற்றில் இருந்த ஹேர் பின்கள், ஊக்குகள் போன்றவை உடல்நலத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும். அதை அகற்ற அதிக தொழில்நுட்பதிறன் தேவைப்படும். அதனை எங்கள் மருத்துவ குழுவினர் சிறப்பாக செய்து சாதனை படைத்தோம் என கூறினார்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்