விழுப்புரம் திரு.வி.க., வீதியில், பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், விழுப்புரம் நகரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



இக்கோவிலுக்குச் சொந்தமான குளம், காமராஜர் மற்றும் திரு.வி.க., வீதியில் தலா 2 கடைகள் மற்றும் முத்தோப்பு அகரம்பாட்டையில் 31 வீடுகள், திரு.வி.க., வீதியில் 7 வீடுகள் என அசையா சொத்துக்கள் உள்ளது. இதில், கோவில் குளம் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தற்போது குளம் இருந்ததற்கான அடையாளமே காணப்படவில்லை. இந்த குளம் குறித்து கடந்த 2007ம் ஆண்டு கோவில் பிரதோஷ பேரவைத் தலைவர் நடராஜன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விபரம் கேட்டுள்ளார்.


மேலும் படிக்க: செங்கல்பட்டு : சோழர்கள் காலத்து கோவிலில் மகா கும்பாபிஷேக விழா; பங்கேற்ற ராகவா லாரன்ஸ்..





அதற்கு, அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்த சுப்ரமணியன் பதில் அனுப்பியுள்ளார். அந்த பதிலில், கோவில் சொத்துக்கள் விபரம் மற்றும் புல எண் 5ல் கருங்கல்லால் ஆன குளம் இருந்தது. தற்போது மூடிய நிலையில் ஒரு சமூகத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில், அனைத்து கோவில்களிலும் சொத்துக்கள் விபரங்களைத் தகவல் பலகையில் எழுத அரசு உத்தரவிட்டுள்ளது.




அதன்படி, கைலாசநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வைத்துள்ள தகவல் பலகையில், குளம் இருந்ததை குறிப்பிடவில்லை. அதிகாரிகள் ஏன் குளம் தொடர்பான விபரத்தை தகவல் பலகையில் எழுதவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், கோவிலுக்குச் சொந்தமான குளம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக, அதிகாரிகள் பதில் கூறியுள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி, குளத்தை மீட்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மெத்தனப் போக்காக செயல்பட்டு வருகின்றனர். எனவே, விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் குளத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க: திருச்செந்தூரில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க மாற்று திட்டம் - அமைச்சர் சேகர்பாபு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண