விழுப்புரம்: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுக் துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் பெயர் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் நகரப் பகுதியான காமராஜர் வீதியில் விழுப்புரம் மாவட்ட இசை பள்ளி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழா கலை நிகழ்ச்சிகள் கலை பண்பாட்டு துறையின் மூலமாக இன்று நடைபெற்றது. அரசு விழாவில் சட்டமன்ற உறுப்பினர், நகர மன்ற தலைவர் உள்ளிட்ட பலரின் பெயர்களை அழைப்பிதழில் பதிவு செய்திருந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அரசு விழாவான இவ்விழாவில் மாவட்ட ஆட்சியரின் பெயரை புறக்கணித்து கலை பண்பாட்டுத்துறை இயக்கம் இவ்விழாவினை நடத்தியது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இந்த விழாவின் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு எவ்வித அழைப்பும் தகவலும் கொடுக்கவில்லை என தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
இளைஞர் வயிற்றில் இருந்து ஹேர்பின், பிளேடு, ஊக்குகள் அகற்றம் - புதுச்சேரி மருத்துவர்கள் சாதனை
கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்